புதுடெல்லி:

புத்த மதம், இந்து மதம் மற்றும் சீக்கிய மதத்திற்கு எதிரான வன்முறையைக் கண்டிக்க  ஐநா  தவறிவிட்டது என இந்தியா குற்றம் சாட்டியுள்ளது.

புத்த மதம், இந்து மதம் மற்றும் சீக்கிய மதங்களுக்கு எதிரான வன்முறை செயல்களை ஐக்கிய நாடுகள் சபை கண்டிக்க தவறிவிட்டதாக இந்தியா குற்றம் சாட்டியுள்ளது.

புத்த மதம், இந்து மதம் மற்றும் சீக்கிய மதத்திற்கு எதிரான வெறுப்புகள் அதிகரித்து வருவதாகவும் அதற்கு எதிரான வன்முறைகளை ஐநா சபை கண்டிக்க தவறிவிட்டதாகவும், சமாதான கலாச்சாரம் ஆபிரகாம் சமுதாயத்திற்கு மட்டுமே இருக்க முடியாது என்பதை இந்திய அடிக்கோடிட்டு காட்டியுள்ளது.

நேற்று நடைபெற்ற “அமைதி கலாச்சாரம்” தொடர்பான ஐநா பொதுச்சபைக் கூட்டத்தில் உரையாற்றிய ஐநாவுக்கான இந்தியா திட்டத்தின் முதல் செயலாளர் ஆஷிஷ் ஷர்மா தெரிவித்துள்ளதாவது: யூத விரோதம், இஸ்லாமிய ஃபோபியா மற்றும் கிறிஸ்தவ எதிர்ப்பு செயல்கள் கண்டிக்கப்பட வேண்டியது மிகவும் அவசியம் என்று இந்தியா ஒப்புக்கொள்கிறது, இதை முக்கிய கருத்தாக ஐநா சபை எடுத்து பேசுவது மகிழ்சியே. இந்த மூன்று மதங்களையும் எடுத்து பேசிய ஐநாசபை புத்த மதம், இந்து மதம் மற்றும் சீக்கிய மதத்திற்கு எதிரான வெறுப்பு மற்றும் வன்முறை எழுச்சியை கவனிக்க தவறி விட்டது, சமாதான கலாச்சாரம் ஆபிரகாமிய மதங்களுக்கு மட்டும் இல்லை என்பதை ஐநா சபை புரிந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் நாங்கள் இங்கு மோதலை ஏற்படுத்த வில்லை, நாங்கள் கட்டமைக்க முயற்சிப்பது ஒரு நாகரிகமான கூட்டணியை மட்டுமே, இதைப் புரிந்துகொண்டு ஐநா சபை தேர்ந்தெடுக்கப்பட்ட சிலருக்காக மட்டுமல்லாமல் அனைவருக்காகவும் பேச வேண்டும் என்பதே எங்களின் ஆசை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானில் அடிப்படைவாதிகளால் சிதறடிக்கப்பட்ட பாமியான் புத்தரையும், மார்ச் மாதம் குருத்வாராவில் நடந்த பயங்கர குண்டு வெடிப்பால் 25 சீக்கிய வழிபாட்டாளர்கள் கொல்லப்பட்டதையும், இந்து மற்றும் புத்த கோயில்களின் அழிவைப் பற்றியும் ஆஷிஷ் ஷர்மா தான் பேசும் போது நினைவு கூர்ந்தார்.

புத்த மதம், இந்து மதம் மற்றும் சீக்கிய மதத்துக்கு எதிரான இத்தகைய வன்முறை செயல்களை கண்டிக்க வேண்டும் என்று 193 உறுப்பினர்கள் கொண்ட பொது சபையில் ஆஷிஷ் சர்மா தெரிவித்துள்ளார்.