குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக ஐ.நா. மனிதஉரிமை ஆணையர் உச்சநீதி மன்றத்தில் ‘குறுக்கீட்டு மனு’!

டெல்லி:

த்தியஅரசு அமல்படுத்தி உள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக இஸ்லாமியர்கள் போர்க்கொடி தூக்கி உள்ளனர். இந்த நிலையில்,  ஐ.நா. மனித உரிமை ஆணையர் உச்சநீதி மன்றத்தில் குறுக்கீட்டு மனு தாக்கல் செய்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மோடி தலைமையிலான பாஜக அரசு, என்ஆர்சி, சிஏஏ, என்பிஆர்  சட்டங்களை அமல்படுத்தி உள்ளது. இந்த சட்டங்களுக்கு வடகிழக்கு மாநிலங்களில் கடுமையான எதிர்ப்பு நிலவி வருகிறது. மேலும் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக இஸ்லாமியர்களும் நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த பிரச்சினைகள் குறித்து ஐ.நா., அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்பட சில வெளிநாடுகள் மத்தியஸ்தம் செய்ய முன்வந்தன. ஆனால், இந்திய அரசு, இது உள்நாட்டு பிரச்சினை, இதில் 3வது நபரோ, நாடோ தலையிட அனுமதிக்க முடியாது என்று கண்டிப்பாக தெரிவித்து விட்டது.

இதற்கிடையில் டெல்லியின் வடக்கு பகுதியில் நடைபெற்ற சிஏஏ ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் இடையே நடைபெற்ற வன்முறையில் ஏராளமானோர் கடுமையாக பாதிக்கப்பட்டனர். பல வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்டன.

இந்த நிலையில், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் தரப்பில் உச்சநீதி மன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

ஆனால், இதற்கு மத்தியஅரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.  சி.ஏ.ஏ என்பது இந்தியாவின் உள் விஷயம் என்றும், சட்டங்களை உருவாக்குவதற்கான இந்திய நாடாளுமன்றத்தின் இறையாண்மை உரிமையைப் பற்றியும் விவாதிக்க எந்தவொரு வெளிநாட்டுக் கட்சியினருக்கும் அமைப்புக்கும்  இடம் இல்லை என்று தெரிவித்து உள்ளது.