Random image

ஓரினச் சேர்க்கை குறித்த தீர்ப்பு : ஐநா இந்தியக் கிளை வரவேற்பு

டில்லி

ரினச் சேர்க்கை சட்ட விரோதமானது அல்ல என்னும் உச்சநீதிமன்ற தீர்ப்பை ஐநாவின் இந்தியக் கிளை வரவேற்றுள்ளது.

ஓரினச் சேர்க்கை சட்ட விரோதமானது என பிரிட்டிஷ் அரசு காலத்தில் இந்தியாவில் கூறப்பட்டது.   அதை ஒட்டி இந்திய குற்றவியல் சட்டத்தின் பிரிவு எண் 377 இயற்றப்பட்டது.   அதன்படி இவ்வாறு ஈடுபடுவோர் மீது சட்ட விரோத வழக்குகள் தொடுக்கப்பட்டன.   அத்துடன் இந்த சேர்க்கை ஆர்வமுடையவர்கள் மற்றவர்களால் துன்புறுத்தப் படுவதாகவும் பல தகவல்கள் வெளியாகின..

இது குறித்து தொடுக்கப்பட வழக்கின் மேல் முறையிட்டில் நேற்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.   அதன்படி ஓரின சேர்க்கை என்பது சட்ட விரோதம் அல்ல எனவும் சட்டப் பிரிவு எண் 377 ஐ  நீக்க உச்சநீதிமன்ற்ம் அரசுக்கு சிபாரிசு அளித்துள்ளது.   இதற்கு ஆதரவுக் குரலும் எதிர்ப்புக் குரலும் மாறி மாறி எழுப்பப் பட்டு வருகின்றன.

ஐக்கிய நாடுகள் சபையின் இந்தியக்கிளை இந்த தீர்ப்பை வரவேற்றுள்ளது.  அந்த கிளை வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஓரின சேர்க்கையாளர்களுக்கான அடிப்படை உரிமை இந்த தீர்ப்பின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.   இவ்வாறு ஆர்வம் கொண்டவர்கள் மீது சமூகம் காட்டும் வெறுப்பு இந்த தீர்ப்பு மூலம் குறையும் என நம்புகிறோம்.

இதன் மூலம் அனைவரும் சமம் என்பது உறுதி ஆகும் என எண்ணுகிறோம்.  அது மட்டுமின்றி இவ்வகை சேர்க்கையில் ஆர்வம் உள்ளவர்கள் மீது நடக்கும் வன்முறை தாக்குதல்கள், அவமானப் படுத்தும் செய்கைகள் ஆகியவைகள் ஒரு முடிவுக்கு வர வாய்ப்புள்ளது.” என தெரிவித்துள்ளது.