தூத்துக்குடி சம்பவத்துக்கு ஐ.நா திட்ட தலைவர் வருத்தம்

வாஷிங்டன்:
தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியான சம்பவத்துக்கு ஐ.நா. சபை சுற்று சூழல் திட்ட தலைவர் எரிக் சோல்ஹெய்ம் வருத்தம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், ‘‘இதற்காக வருத்தம் அடைந்துள்ளேன். போராட்டம் வன்முறையாக மாறாமல் இருக்கும் என நம்பினேன். பலியோனோருக்காக பிரார்த்தனை செய்து கொள்கிறேன். அவர்களின் குடும்பத்தினருக்கு எனது இரங்கல்களை தெரிவித்து கொள்கிறேன். இது நடந்திருக்க வேண்டாம்.

போராட்டங்கள் வன்முறையின்றி இருக்க வேண்டும். போலீசாரும் தனது வலிமையை பயன்படுத்த கூடாது. இதனால் அதிகம் வருத்தம் ஏற்பட்டுள்ளது. திட்டங்களை அமல்படுத்தும் முன் மக்களிடம் பேச வேண்டும். இதுபோன்ற திட்டங்களுக்கு சுற்று சூழல் பாதுகாப்பு தேவையானது’’ என்றார்.