இசை அரசி என்று பண்டித ஜவகர்லால் நேருவால் பாராட்டப்பட்ட எம்.எஸ்.சுப்புலட்சுமியின் நினைவாக அவருக்கு தபால்தலை வெளியிட்டு ஐக்கியநாடுகள் சபை அவரை கெளரவப்படுத்தியிருக்கிறது.
எம்.எஸ் சுப்புலட்சுமியின் 100 பிறந்தநாள் நூற்றாண்டு விழாவாக உலகெங்கிலும் உள்ள கர்நாடக இசைப்பிரியர்களால் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இசைக்கு அவர் செய்த தொண்டை நினைவுபடுத்தும் வகையில் 1.20 டாலர்கள் மதிப்புள்ள, எ.ம்.எஸ் சுப்புலட்சுமியின் உருவமும் ஐ.நாவின் சின்னமும் பொறிக்கப்பட்ட தபால் தலை வெளியிடப்பட்டது.

mss1

காந்தி ஜெயந்தியன்று நியூயார்க் ஐ.நா தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரபல பாடகி சுதா ரகுநாதன் கலந்துகொண்டு காந்தியின் ராம் தன் பாடலை 7 மொழிகளில் பாடி சிறப்பித்தார்.