புதிய குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய இந்திய அரசுக்கு ஐ.நா உரிமைகள் ஆணையம் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Protesters shout slogans during a protest against the Citizenship Amendment Bill, that seeks to give citizenship to religious minorities persecuted in neighbouring Muslim countries, inside the Jamia Millia Islamia University in New Delhi, India, December 14, 2019. REUTERS/Adnan Abidi

ஐ.நாவின் உயர்மட்ட மனித உரிமை அதிகாரியின் அலுவலகம் தரப்பில், இந்தியா கொண்டுவந்துள்ள புதிய குடியுரிமை திருத்தச் சட்டம், இஸ்லாமியர்களுக்கு எதிரான பாகுபாட்டை காட்டுவதால், அதனை ரத்து செய்யும் படி வலியுறுத்தப்பட்டுள்ளது. புதிய குடியுரிமை திருத்தச் சட்டம் கடந்த வாரம் நிறைவேற்றப்பட்டதையடுத்து, அசாம் மற்றும் திரிபுராவில் வன்முறை போராட்டங்கள் வெடித்தன. அதில் மூன்று பேர் கொல்லப்பட்டதோடு, காவல்துறை அதிகாரிகள் பலர் படுகாயமும் அடைந்தனர்.

இது தொடர்பாக அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ள ஐ.நா மனித உரிமைகள் ஆணையம், இச்சட்டத்தை எதிர்ப்பவர்கள் மீது இந்திய அரசு நடத்தும் மிருகத்தனமான ஒடுக்குமுறையை கண்டிப்பதாகவும், இச்சட்டம் பாரபட்சமானதாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. புதிய குடியுரிமை திருத்தச் சட்டம் ஆப்கானிஸ்தான், வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் நாடுகளில் இருந்து அகதிகளாக இந்தியா வரும் குறிப்பிட்ட 6 மதத்தவர்களுக்கு குடியுரிமை வழங்கும் வகையில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

ஆனால் இச்சட்டம் இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பு வழங்காது என்று மனித உரிமை செய்தித் தொடர்பாளர் ஜெர்மி லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மேலும் கருத்து தெரிவித்துள்ள அவர், “திருத்தப்பட்ட சட்டம் இந்தியாவின் அரசியலமைப்பு, சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கை மற்றும் இனப்பாகுபாட்டிற்கு எதிராக உள்ளது. இது இந்தியா ஒரு மாநில கட்சி கீழறுக்க தோன்றும். இந்தியாவின் புதிய குடியுரிமை திருத்தச் சட்டம் சர்வதேச உடன்படிக்கைகளை மீறியதாகவே இருக்கிறது. இது இனம், மொழி மற்றும் மதப் பாகுபாடுகளுக்கு எதிராக உள்ளது.

இந்தியாவில் எல்லை பாதுகாப்பு  சட்டங்கள் நடைமுறையில் இருந்தாலும், இந்தத் திருத்தங்கள் பிற நாட்டை சேர்ந்த மக்கள் அந்நாட்டை நாடுவதில் பாரபட்சமான விளைவை ஏற்படுத்தும். ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு குடியேறுபவர்களின் இடம்பெயர்வு நிலையைப் பொருட்படுத்தாமல், அவர்களின் மனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்” என்று தெரிவித்தார்.

தற்போது மத்திய அரசு கொண்டுவந்துள்ள இந்த சட்டத்திருத்தம், மதச்சார்பற்ற அரசியலமைப்பை மீறுவதாக இருக்கிறது என இஸ்லாமிய அரசியல் கட்சி ஒன்று தனது வழக்கறிஞர்கள் மற்றும் சில போராட்ட உரிமை குழுக்களுடன் சேர்ந்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த சட்டம் சர்வதேச மனித உரிமைகளுடன் ஒத்துப்போகிறதா என்பதை நீதிமன்றம் கவனத்தில் கொண்டு, தீர்ப்பு வழங்கும் என தாங்கள் நம்புவதாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.