பாங்காக்

வுதியில் இருந்து புகலிடம் கோரி தப்பிய பெண் குறித்து விரைவில் முடிவு அளிப்பதாக ஐநாவின் அகதிகள் துறை தெரிவித்துள்ளது.

பத்திரிகையாளர் ஜமால் கொலை செய்ய்ப்பட்ட பிறகு சவுதி அரேபிய அரசின் நடவடிக்கைகள் குறித்து பல விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.   அதை ஒட்டி சவுதி அரேபியர்கள் மீது அனைத்து நாடுகளும் மிகவும் கவனத்துடன் செயல்பட்டு வருகின்றன.   இந்நிலையில் சவுதியை சேர்ந்த ஒரு பெண்ணின் விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சவுதி அரேபியாவை சேர்ந்த ரஹாஃப் முகமது அல் குனான் என்னும் 18 வயதுப் பெண் குவைத்தில் குடும்பத்தினருடன் பயணம் செய்துக் கொண்டிருந்தார்.   அந்தப் பெண்ணை அவர்கள் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் கொடுமை படுத்தியதாக கூறப்படுகிறது.   அவர் திடீரென அவர்களிடம் இருந்து தப்பி ஆஸ்திரேலிய செல்ல முடிவு எடுத்து விமானப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

அவரை தாய்லாந்து விமான நிலையத்தில் சவுதி மற்றும் குவைத் அதிகார்கள் பிடித்துள்ளனர்.   அத்துடன் அந்த அதிகாரிகள் ரஹாஃபின் பயண ஆவணங்களைப் பிடுங்கிக் கொண்டுள்ளனர்.  அந்தப் பெண் தன்னை பெற்றோரிடம் அனுப்பினால் கொலை செய்து விடுவார்கள் என கெஞ்சியும் அந்தப் பெண்ணை அதிகாரிகள் ஒரு ஓட்டல் அறையில் சாமான்களுக்கு நடுவே அடைத்து வைத்துள்ள்னர்.

நேற்று முன் தினம் ரஹாஃப் இது குறித்து தனது டிவிட்டரில் பதிவு இட்டுள்ளார். அந்த பதிவில், “என்னை குவைத் ஏர்லைன்ஸ் மூலம் குவைத்துக்கு நாடு கடத்த முடிவு செய்துள்ள்னர்.  இதை தாய்லாந்து அரசு தடுத்து நிறுத்தி எனக்கு புகலிடம் அளிக்க வேண்டும்” என கேட்டுக்கொண்டுள்ளார்.   அத்துடன் தன்னை அடைத்து வைத்துள்ள வீடியோவையும் வெளியிட்டார்.

அதன் பிறகு அவரது டிவிட்டர் பக்கம் முடக்கப்பட்டது.    சவுதி தூதரக அதிகாரி ஒவர் ராஹாஃபின் தந்தை தங்களை தொடர்பு கொண்டு அவரை அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொண்டதாக கூறினார்.  ஐ நா சபையின் அகதிகள் முகாமின் தாய்லாந்துக் கிளை புகலிடம் கேட்கும் ஒருவரின் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதால் அவரை திரும்ப அனுப்பக் கூடாது எனவும் அவருக்கு தாய்லாந்து புகலிடம் அளிப்பது குறித்து விரைவில் முடிவு கூறுவதாகவும் தெரிவித்துள்ளது.

தாய்லாந்து காவல்துறையினர் ஐநாவின் முடிவு தெரியும் வரையில் அவரை நாட்டை விட்டு அனுப்பப் போவதில்லை  என உறுதி அளித்துள்ளது