“அங்கீகாரம் இன்றி விற்கப்படும் மனைகளின் முதல் பதிவுக்கு மட்டுமே தடை உள்ளது’ என, பதிவுத்துறை தெளிவுபடுத்தி உள்ளது. அங்கீகாரம் இல்லாத மனைகளை பதிவு செய்வதை தடுக்க, பத்திரப்பதிவு சட்டத்தின், ’22 அ’ பிரிவில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. இதை அமல்படுத்த, எட்டு ஆண்டுகளுக்கு பின், தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.
0
இதை எந்த வகையில், அமல்படுத்துவது என்பது குறித்து, பதிவுத்துறை தலைவரிடம் இருந்து, சுற்றறிக்கை வரும் என்று சார்பதிவாளர்கள் காத்திருந்தனர். ஆனால், அரசாணை நகலின் கீழ் பகுதியில், ‘தகவலுக்காக’ என, குறிப்பிட்டு பதிவுத்துறை தலைவரின் பெயரில், சார் பதிவாளர்களுக்கு, நகல் அனுப்பப்பட்டு உள்ளது. இதனால், இதை அமல்படுத்துவதா, கூடாதா என்று, சார்பதிவாளர்கள் குழப்பமடைந்துள்ளார்கள்.
அரசாணை மற்றும் அரசிதழ் அறிவிப்புகளில் உள்ளபடி, அங்கீகாரம் இன்றி வீட்டு மனையாக பதிவான பத்திரங்களை வைத்திருப்பவர்கள், அடுத்தடுத்து விற்றால், அந்த ஆவணங்கள் பதிவு செய்யப்படும்; அதற்கு தடை இல்லை. புதிதாக விவசாய நிலத்தை, வீட்டு மனையாக பதிவு செய்ய வரும் பத்திரங்களுக்கு மட்டுமே, தமிழக அரசு தடை விதித்து உள்ளது.