பொதுமக்களே உஷார்: அங்கீகாரம் பெறாத மனைகள் பதிவு செய்யக்கூடாது: சென்னை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு!

சென்னை:

தமிழகத்தில் அங்கீகாரம் பெறாத மனைகளை பதிவு செய்ய சென்னை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவிட்டு உள்ளது.

இதுபற்றி உடனடியாக அனைத்து பத்திர பதிவு அலுவலகங்களுக்கும் சுற்றறிகை அனுப்பவும் பத்திர பதிவு ஐ.ஜிக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

cort

தமிழகம் முழுவதும் உள்ள  விளை நிலங்கள், காடுகள், ஏரிகள், குளங்கள் மற்றும் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு, நத்தம், பஞ்சமி போன்ற நிலங்கள் அரசியல்வாதிகள் அதிகாரிகள் துணையுடன் வீட்டு மனைகளாக மாற்றி விற்பனை செய்து வருவது தொடர்கதையாகிறது.

இதன் விளைவாக மழை காலங்களிள் தண்ணீர் செல்வதற்கு வழி இல்லாமல் மழைநீர் வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது. இதுபோன்ற பாதிப்புகள்  ஏற்கனவே தமிழ்நாட்டில் பல இடங்களில் நடைபெற்றாலும், கடந்த ஆண்டு இறுதியில் சென்னையில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பின்போது, சென்னை மக்கள் பட்ட அவலம் நாம் அனைவரும் கண்கூடாக காண முடிந்தது.

land1

இதுபோன்ற விளைவுகள் இனிமேலும் தமிழ்நாட்டில் நடக்காதவாறு, விளை நிலங்கள், குளங்கள், ஏரிகள் போன்ற வற்றை வீட்டு மனைப்பட்டாக்களாக மாற்றுவதை எதிர்த்து வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்தார்.

இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள், விளைநிலங்களை வீட்டு மனைகளாக மாற்றுவதை தடுக்க விரைவான நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட அனைத்து விவரங்களுடன் விரிவான பதில் மனுவை தமிழக அரசு தாக்கல் செய்யவேண்டும் என உத்தரவிட்டிருந்தனர்.

இவ்வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அங்கீகாரம் பெறாத வீட்டு மனைகள் மற்றும் கட்டிடங்களை பதிவு செய்யக்கூடாது என பத்திரப் பதிவு அலுவலகங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பும்படி பத்திரப்பதிவு துறை ஐ.ஜி.க்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும், இந்த சுற்றறிக்கை அனுப்பப்பட்டது தொடர்பான தகவலை அக்டோபர் 21-ம் தேதி நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

பொதுமக்களே உஷாராக இருங்கள்…. ஏமாந்து விடாதீர்கள்….  நிலம் வாங்கும்போது கவனமாக இருங்கள்…

இதன் காரணமாக தமிழகத்தில் விளை நிலங்கள், வீட்டு நிலங்களாக மாற்றப்படுவது தடுக்கப்படும் என்பது உறுதி.

land

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: High Court, Madras, ordered, register, should not, tamilnadu, Unauthorized sites, அங்கீகாரம், அதிரடி, உத்தரவு, ஐகோர்ட்டு, சென்னை, செய்யக்கூடாது:, பதிவு, பெறாத மனைகள்
-=-