நாகரீகம் தெரியாத விஜயேந்திரர்: நடிகர் விஜய் சேதுபதி!

தமிழ்த்தாய் வாழ்த்துக்கு மரியாதை அளிக்க வேண்டும் என்ற நாகரீகம் தெரியாதவர் விஜயேந்திரர் என்று நடிகர் விஜய் சேதுபதி கருத்த தெரிவித்துள்ளார். .

நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட காஞ்சி சங்கரமட இளைய மடாதிபதி விஜயேந்திரர் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டபோது எழுந்து நிற்காமல் அமர்ந்திருந்தார்.  நிகழ்ச்சியின் இறுதியில் பாடப்பட்ட தேசிய கீதத்துக்கு மட்டும் எழுந்து நின்று மரியாதை செலுத்தினார்.

விஜயேந்திரர் செய்கைக்கு பலரும்  தங்களது எதிர்ப்பையும், கண்டனத்தையும் தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் திருச்சியில் ஒரு விழாவில் பங்கேற்ற நடிகர் விஜய் சேதுபதியிடம் இது  குறித்து கேட்டபோது, ‘‘தமிழ்த்தாய் வாழ்த்து ஓலித்தபோது எழுந்து நின்று மரியாதை செய்யது அவசியம். விஜயேந்திரருக்கு இந்த நாகரீகம் தெரியவில்லை” என்று தெரிவித்தார்.

 

கார்ட்டூன் கேலரி