சிகரெட் பற்ற வைக்காத மருமகனைக் கத்தியால் குத்திய ’’தங்க மாமா.’’.

--

சிகரெட் பற்ற வைக்காத மருமகனைக் கத்தியால் குத்திய ’’தங்க மாமா.’’.

கோவையில் உள்ள ராமநாதபுரம் பகுதியில் வசிப்பவர் மணிகண்டன். கார் டிரைவர்.

 10 ஆம் வகுப்பு படிக்கும் இவரது தங்கையின் மகன் யோகேஷ், மாமாவைப் பார்க்க மணிகண்டன் வீட்டுக்கு வந்துள்ளார்.

மாலைப்பொழுதில் சிகரெட்டை வாயில் செருகிக் கொண்ட மணிகண்டன் , மருமகன் யோகேஷை அழைத்து ‘’மருமகனே.. இந்த சிகரெட்டில் நெருப்பு பற்ற வை’’ என்று ஆசையாய் சொல்லி இருக்கிறார்.

பள்ளி மாணவன் யோகேஷுக்கு, மூக்குக்கு மேல் கோபம் பொத்திக்கொண்டு வந்துள்ளது.

‘’ ஸ்கூல்ல படிக்கிற என்ன சிகரெட் பத்த வைக்க சொல்றியா?’’ என்று கேட்டுத் திட்டியுள்ளார்.

சிகரெட் பற்ற வைக்காததோடு, தன்னை திட்டியதால், ஆத்திரம் அடைந்த மணிகண்டன், யோகேஷின் வயிற்றில் கத்தியை எடுத்துக் குத்தியுள்ளார்

படுகாயம் அடைந்த மருமகன் யோகேஷ், கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மணிகண்டனை போலீசார் கைது செய்து கோவை சிறையில் அடைத்துள்ளனர்.

– ஏழுமலை வெங்கடேசன்