புதுடெல்லி: இந்தியாவில் நிலவும் வேலையில்லா திண்டாட்டம் மற்றும் பணிப் பாதுகாப்பற்ற சூழல், மோட்டார் தொழில்துறையிலும் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது.

இதுகுறித்து கூறப்படுவதாவது; கடந்த 13 ஆண்டுகளில் இல்லாத வகையில், ஸ்கூட்டர் விற்பனை தற்போது சரிந்துள்ளது. மேலும், கார்கள் மற்றும் எஸ்.யு.வி. போன்ற பயணிகள் வாகன வகையிலும், கடந்த 5 ஆண்டுகளில், மிக மெதுவான வளர்ச்சியே ஏற்பட்டுள்ளது.

இரு சக்கர வாகனங்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கையில், ஸ்கூட்டர்களின் எண்ணிக்கை மட்டும் மூன்றில் ஒரு பங்கு. கடந்த 2018-19 நிதியாண்டில், ஸ்கூட்டர் விற்பனை 67 லட்சம் யூனிட்டுகள் என்பதாக இருந்தாலும், அதற்கு முந்தைய ஆண்டோடு ஒப்பிடுகையில், இது 0.27% குறைவே.

கடந்த சில மாதங்களாகவே, இருசக்கர வாகன விற்பனை மந்தமாக இருப்பதால், ஹீரோ மோட்டோ, ஹோண்டா மோட்டார் சைக்கிள், ஸ்கூட்டர் இந்தியா மற்றும் டிவிஎஸ் போன்ற நிறுவனங்கள், தம்முடைய உற்பத்தியை குறைத்துள்ளன மற்றும் டீலர்களுக்கு வழங்கும் எண்ணிக்கையும் குறைந்துள்ளது.

இந்திய வேலைவாய்ப்பு சந்தையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியானது, மோட்டார் சைக்கிள் சந்தையை பாதித்துள்ளதாக கூறப்படுகிறது.

– மதுரை மாயாண்டி