சிங்கப்பூரில் வேலையின்மை: நாடு திரும்ப 10ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் காத்திருப்பு

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் வேலையின்மை காரணமாக,  நாடு திரும்ப 10ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் தாயகம் திரும்ப காத்திருப்பதாக தூதரகம் தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்று பரவல் காரணமாக, உலக பொருளாதாரமே சீரழிந்து வரும் நிலையில், சிங்கப்பூரிலும் தொற்றின் பாதிப்பு காரணமாக ஏராளமான தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால், அங்கு பணியாற்றி வரும் ஏராளமான  இந்தியர்கள், தங்களது வேலையை இழந்து அவதிப்படுன்றனர்.

கொரோனா தொற்றின் தீவிரம் உலக பொருளாதாரத்தையே புரட்டிப்போட்டு உள்ளது. இதனால், சிங்கப்பூரில் உள்ள பல   தொழில் நிறுவனங்கள் மூப்பட்ட நிலையில், பல தொழில் நிறுவனங்கள் ஆட்களை குறைத்து வருகிறது. இதனால், வேலையிழந்துள்ள இந்தியர்கள் தாயகம் திரும்பி வருகின்றனர்.

இதுகுறித்து கூறிய,  தூதரக அதிகாரிகள்,  சிங்கப்பூரில் இருந்து நாடு திரும்புவதற்கு தினசரி 100க்கும் மேற்பட்டோர், விருப்பம் தெரிவித்து, தங்களது பெயர்களை பதிவு செய்து வருகின்றனர். இதுவரை 10ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தாயகம் திரும்ப காத்திருக்கின்றனர்.

இதற்கு காரணமாக, அவர்களின்  வேலையிழப்பு, குடும்ப சூழல் மற்றும் கொரோனா பரவலே.

தற்போதைய நிலையில்,  “வந்தே பாரத்’ திட்டத்தின் கீழ் சிறப்பு விமானங்கள் மூலம் குறிப்பிட்ட நபர்களை மட்டுமே தாயகம் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர்,  இதுவரை 120 சிறப்பு விமானங்கள் மூலம் சுமார் 17 ஆயிரம் இந்தியர்கள் நாடு திரும்பி உள்ளனர். மேலும் கூடுதல் விமானங்களை இயக்க கோரிக்கை வைத்துள்ளோம் என்று தெரிவித்துள்ளனர்.