டில்லி

ந்திய பொருளாதார கட்டுப்பாட்டு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி சென்ற மாதம் இந்தியாவில் வேலையற்றோர் எண்ணிக்கை 7.2% அதிகரித்துள்ளது.

இந்தியாவில் வேலையற்றோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போது நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் இது பிரதமர் மோடிக்கு எதிரானதாக அமையும் என பல ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர். மக்களவை தேர்தல் வரும் மே மாதம் நடைபெற வாய்ப்புள்ளதால் அதற்குள் வேலை வாய்ப்பை அதிகரிக்க அரசு திட்டமிட்டு வருகிறது.

மத்திய அரசு நிறுவனமான இந்திய பொருளாதார கட்டுப்பாட்டு மையம் ஓவ்வொரு மாதமும் வேலையற்றோர் எண்ணிக்கையை கணக்கெடுத்து அந்த அறிக்கையை அரசுக்கு அளிக்கிறது. இதில கடந்த டிசம்பர் மாதம் இந்த மையம் அளித்த அறிக்கை அரசால் வெளியிடப்படாமல் வைக்கப்பட்டது அதன் பிறகு அந்த அறிக்கை அதிகாரபூர்வமற்ற முறையில் வெளியாகியது.

அந்த அறிக்கையில் கடந்த 45 வருடங்களில் இல்லாத அளவுக்கு வேலையற்றோர் எண்ணிக்கை அந்த மாதம் அதிகரித்து இருந்ததாக கூறப்பட்டது. இந்த எண்ணிக்கை பாஜக அரசுக்கு தேர்தலில் பின்னடைவு உண்டாகும் என்பதால் வெளியிடப்படாமல் மறைத்து வைக்கப்பட்டதாக எதிர்க்கட்சிகள் தெரிவித்தன. இதை ஒட்டி நாட்டில் கடும் சர்ச்சை ஏற்பட்டது.

இந்நிலையில் சென்ற மாதத்திற்கான அறிக்கையை இந்திய பொருளாதார கட்டுப்பாட்டு மையம் வெளியிட்டுள்ளது. அதில் சென்ற மாதத்தில் அதாவது பிப்ரவரி மாதத்தில் அதற்கு முந்தைய மாதத்தை விட 7.2% வேலையற்றோர் எண்ணிக்கை அதிகரித்துள்ள தாக கூறப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் சென்ற இரு மாதங்களில் பல பிரிவு ஊழியர்கள் வேலை இழந்ததே எனக் கூறப்படுகிறது.