நாட்டில் வேலைவாய்ப்பின்மை அதிகரிப்பு..!

--

துவரை இல்லாத அளவுக்கு கடந்த இரு வருடங்களில்  இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரிய வந்திருக்கிறது.

இந்திய பொருளாதார சூழலை ஆய்வு செய்யும் சி.எம்.ஐ.இ.  என்ற அமைப்பு நடத்திய ஆய்வில் அக்டோபர் மாதத்தில் நாட்டில் வேலைவாய்ப்பின்மை 6.9 சதவிகிதமாக உயர்ந்திருப்பது தெரியவந்துள்ளது. அதே போல உழைக்கத் தயாராக இருப்பவர்களின் விகிதம் 42.4 சதவிகிதமாக குறைந்திருக்கிறது.

கடந்த இரு வருடங்களில்.. ஆண்டுகளில் அதாவது, பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்கு பிறகு உழைக்கத் தயாராக இருப்பவர்களின் விகிதமானது, குறைந்துள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

கடந்த 2017-ம் வருடம்  அக்டோபர் மாதம் வேலைவாய்ப்பு பெற்றவர்களின் எண்ணிக்கை 407 மில்லியனாக இருந்தது. இந்த (2018) வருடம் அக்டோபர் மாதம் 397 மில்லியனாக குறைந்துவிட்டது.

அதாவது வேலைவாய்ப்பின்மை 2.4 சதவீதம் கடந்த வருடத்தைவிட இந்த வருடம் அதிகரித்திருக்கிறது.

2017-ம் வருடம் வேலை தேடுவோரின் எண்ணிக்கை 21.6 மில்லியனாக இருந்தது, இந்த ஆண்டு அக்டோபர் மாதம் 29.5 மில்லியனாக  உயர்ந்துள்ளது.

வருடந்தோறும் 12 மில்லியன் மக்கள் தொழிலாளர்களாக மாறுகின்றனர். ஆனால் அதற்கு ஏற்றவாறு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுவதில்லை என்பதாலேயே வேலைவாய்ப்பின்மை அதிகரிக்கிறது என்று அந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.