தமிழ்நாட்டில் ஆங்காங்கே பொழியும் திடீர் கனமழை!

சென்னை: கோடை வெயில் இந்தாண்டு சற்று முன்கூட்டியே துவங்கிவிட்ட நிலையில், தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் திடீரென மழை பெய்துள்ளது.

மார்ச் மாதம் முதலே கோடை வெயிலின் தாக்கம் தமிழகத்தில் தெரியத் துவங்கிய நிலையில், மதுரை மற்றும் தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் அதிகாலை முதற்கொண்டு மழை பெய்தது.

மதுரையில் அதிகாலை முதல் சாரல் மழை பெய்தது என்பது குறிப்பிடத்தக்கது. தூத்துக்குடி மற்றும் கோவில்பட்டி சுற்றுவட்டாரத்தில் அதிகாலை முதல் கனமழை பெய்து வருகிறது.

மேலும், அருகேயுள்ள விருதுநகர் மாவட்டத்தின் சாத்தூரில் இடி-மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. கோடை வெயில் துவங்கியுள்ள நேரத்தில், திடீரென எதிர்பாராமல் பெய்யும் கனமழையால் மக்கள் திடீர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

You may have missed