தோல்விகள் மூலம் வெற்றிப்பெறும் வழிகளை கற்றுக்கொண்டேன் – பி.வி.சிந்து

--

ரியோ ஒலிம்பிக் போட்டியை தொடர்ந்து ஏமாற்றத்தை அளித்து வரும் சிந்து, தன்னை பற்றிய சர்ச்சைகள் குறித்து கவலைப்படவில்லை என்று தெரிவித்துள்ளார். ஆசிய போட்டிகளில் வெற்றிபெறுவதில் அவரின் முழு கவனமும் உள்ளதாக கூறியுள்ளார்.

p.v.-sindhu

2016ம் ஆண்டு நடந்த ரியோ ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற பி.வி.சிந்து, கடந்த ஆண்டு நடைபெற்ற ஆறு போட்டிகளில் 3 போட்டிகளில் மட்டுமே வெற்றிப்பெற்றுள்ளார். இதனால் அவரின் விளையாட்டை விமர்சித்து சிலர் கருத்து தெரிவித்து வந்தனர். ஒருசிலர் சர்ச்சைகளை கிளப்பினர்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக பேசியுள்ள சிந்து தனது பார்வை இந்தோனேசியாவில் நடைபெற உள்ள ஆசிய போட்டிகள் மீது இருப்பதாக கூறியுள்ளார். மேலும், சர்ச்சைகள் குறித்து கவலை கொள்வதில்லை என்றும், தோல்விகள் மூலம் அடுத்த போட்டியில் எப்படி வெற்றிபெற வேண்டும் என்பதை கற்று கொண்டதாகவும் சிந்து தெரிவித்தார்.

போட்டியின் ஆரம்பத்திலோ அல்லது அடுத்த சுற்றிலோ தோல்வி அடைந்தால் அது மோசமான ஒன்று, இறுதி போட்டிக்கு சென்ற நிலையில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். அங்கு தோல்வியை சந்தித்ததால் சிலவற்றை கற்றுகொண்டேன் என்று சிந்து தெரிவித்தார்ஃப்.

ஆசிய போட்டிகள் பற்றி சிந்து கூறுகையில் “ இந்த போட்டிகள் கடினமான ஒன்று, சூப்பர் சீரிஸ் தொடர்கள் போன்றே ஆசிய போட்டிகள் இருக்கும். இதில் ஆசியாவை சேர்ந்த அனைத்து வீரர், வீராங்கனைகளும் பங்கேற்பார்கள். அதன்காரணமாக இந்த ஆசிய போட்டி கடினமாகதாகவும், சுவாரசியமானதாகவும் இருக்கும்” என்றார்.

உலக சாம்பியன்ஷிப், ஹாங்கான் ஒப்பன் டென்னிஸ் தொடர், சூப்பர் சீரிஸ் போட்டிகளில் பங்கேற்ற சிந்து தொடர் தோல்வியை தந்து அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

இந்த தோல்விகளுக்கு பதிலளிக்கும் விதமாக அடுத்து நடைபெற உள்ள போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தங்கப்பதக்கம் வெல்வேன் என்று சிந்து கூறியுள்ளார்.