தஞ்சை பெரிய கோயில் : ஆயிரமாண்டு அதிசயம் !! முதல் முறையாக மூடியது தொல்லியல் துறை …

திருச்சி :

 

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க திருச்சி மண்டலத்தில் உள்ள நான்கு கோயில்கள் மார்ச் 31 வரை மூடப்படும் என்று இந்த கோயில்களை நிர்வகிக்கும் இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் (ஏ.எஸ்.ஐ) அறிவித்துள்ளது.

தஞ்சாவூரில் உள்ள அருள்மிகு ப்ரஹதீஸ்வரர் கோயில் (தஞ்சை பெரியகோயில்), தஞ்சை தாசுரத்தில் உள்ள அருள்மிகு ஐராவடேஸ்வரர் கோயில், அரியலூர் கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள அருள்மிகு ப்ரஹதீஸ்வரர் கோயில் மற்றும் பெரம்பலூர் வலிகண்டபுரத்தில் உள்ள அருள்மிகு வலீஸ்வரர் ஆலயம் ஆகியவற்றில் மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஏ.எஸ்.ஐ வட்டாரங்கள் தெரிவித்தன.

கடந்த மாதம் பிப். 5 அன்று தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு விழா வெகு விமரிசையாக நடந்தது, கும்பாபிஷேகம் நடந்து ஒரு மண்டலத்திற்குள்ளாக உலகெங்கும் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக மூடப்படுவது பக்தர்களை மிகுந்த வேதனைக்கு உள்ளாக்கியுள்ளது.

தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளை மூட உத்தரவிடப்பட்டதிலிருந்து, பக்தர்கள் வருகை அதிகரித்திருப்பதால் வேறு வழியின்றி இந்த கோயில்கள் மூடப்படுவதாக சொல்லப்படுகிறது.

புதுடில்லியில் உள்ள இந்திய தொல்லியல் துறையின் தலையமையகத்தின் அறிவுறுத்தலின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று மண்டல ஏ.எஸ்.ஐ. அலுவலர்கள் தெரிவித்தனர். ஏ.எஸ்.ஐ.யால் நிர்வகிக்கப்படும் இந்த கோயில்களில், தஞ்சை பெரிய கோயில் மூடப்படுவது அதன் ஆயிரம் ஆண்டுகால வரலாற்றில் இதுவே முதல்முறை.