‘ஆரோக்கிய சேது’ செயலியை உருவாக்கியது யார்? ஆர்டிஐ கேள்விக்கு பதில் தெரிவிக்க மறுக்கும் ஆரோக்கியமற்ற மோடி அரசு…

டெல்லி: கொரோனா தொடர்பான தகவல்களை மக்கள் அறிந்துகொள்ள  அறிமுகப்படுத்தப்பட்ட ஆரோக்கியசேது செயலியை உருவாக்கியது யார் என்று ஆர்டிஐ மூலம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மத்தியஅரசு  பதில் தெரிவிக்க மருத்து வருகிறது. இது அந்த செயலி மீதான நம்பத்தன்மை மீது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனா தொடர்பான தகவல்களுக்கு கடந்த ஏப்ரல் மாதம் மத்திய அரசு அறிமுகப்படுத்தியது ஆரோக்கிய சேது செயலி. இதை பிரதமர் மோடி அறிமுகப்படுத்தி, நாட்டு மக்கள் அனைவரும்  பதிவிறக்கம் செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். அதன்படி, இதுவரை 9 கோடி பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இதன்மூலம் உலக அளவில் அதிகம் தரவிறக்கம் செய்யப்பட்ட செயலியில் ஆரோக்ய சேது 7-ம் இடம் பிடித்துள்ளதாகவும் மத்தியஅரசு அறிவித்தது.

இந்த ஆரோக்ய சேது செயலி, தேசிய தகவல் மையத்தால் உருவாக்கப்பட்டதாக கூறப்பட்டது. மேலும், இந்த வைரஸ் டிராக்கர் செயலியை, இந்தி, ஆங்கிலம் உட்பட 11 மொழிகளில் பயன்படுத்தலாம் என்றும்,  செயலியை பயன்படுத்த புளூடூத் மற்றும் இருப்பிட அணுகல் தேவை. அத்துடன்  பயனர்கள் முதலில் தங்கள் மொபைல் எண்ணுடன் பதிவு செய்ய வேண்டியதும் அவசியமானது. அத்துடன், இநத  செயலியின் Privacy Policy பற்றி கவலைப்படுபவர்களுக்கு, இது சேமிக்கப்பட்ட டேட்டா “encrypted” என்றும் கூறப்பட்டது.

இந்த செயலியை பயன்படுத்துபவர்கள் வசிக்கும்  பகுதியில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று நபரின் விவரத்தை உடனடியாக காட்டும். மேலும், கொரோனா இருக்கிறதா என்பதையும் அறிகுறிகளை பதிவிட்டு, உறுதிப்படுத்திக் கொள்ளமுடியும் என்று வைரஸ் பற்றிய ஆலோசனைகள் பற்றி மக்களுக்கு “முன்கூட்டியே” தெரிவிக்கும் முயற்சிகளை “அதிகரிப்பதை” நோக்கமாகக் கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

மேலும்,  இனி புதிதாக தயாரிக்கப்படும் அனைத்து ஸ்மார்ட்போன்களிலும் ஆரோக்கிய சேது செயலி கட்டாயம் இருக்க வேண்டும் என அரசு அறிவித்துள்ளது.

இதனிடையே ஆரோக்கிய சேதுவின் நம்பகத்தன்மை குறித்து பல கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.  இந்த செயலியை பயன்படுத்த  செல்போனின் Bluetooth மற்றும் GPS லொகேஷனை எப்போதும் ஆன் செய்து வைத்திருக்க வேண்டிய நிலையில் இருப்பதால், இதன் மூலம்  பயனாளர்களின் நகர்வுகளை கண்காணிக்க முடியும் என புகார் எழுந்தது. அதைத்தொடர்ந்து,  இந்த செயலியை பயன்படுத்தும் ராணுவ வீரர்கள் பொறுப்பு பதவி போன்றவற்றை பதிவு செய்ய வேண்டாம் என கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.

இது ஆரோக்கிய சேதுவின் மீதான நம்பகத்தன்மை குறித்துமேலும் சந்தேங்களை எழுப்புவதாக  அமைந்தது. இது தொடர்பாக முன்னாள்  காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் ஆரோக்கிய சேது செயலியின் நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுப்பினார். அதுபோல,  இந்த செயலி  தனிநபர் உரிமை விதிகளுக்கு மாறாக இருப்பதாகவும் இன்டர்நெட் ஃபிரீடம் பவுண்டேஷன் அமைப்பு  குற்றம் சாட்டியது.

அதுபோல பிரான்ஸை சேர்ந்த ஹேக்கரான எலியட் ஆண்டர்சன், 9 கோடி இந்தியர்களின் அந்தரங்க தகவல் கசியும் ஆபத்துக்கு உள்ளதாக கூறியதோடு மட்டுமன்றி, பிரதமர் அலுவலகத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாசிடிவ் என்பது உள்ளிட்ட தகவல்களை வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தினார். இதனால் ஆரோக்கிய சேதுவின் நம்பகத்தன்மை விவாதப்பொருளாக மாறியது.

இநத் நிலையில், சமூக ஆர்வலர் சவுரவ் தாஸ் என்பவர்  ஆரோக்கிய சேது குறித்த தகவல்களை தகவல் பெறும் உரிமை சட்டத்தின்படி கேட்டிருந்தார். அவரது மனுவில், ஆரோக்கிய சேது செயலி பயன்பாட்டிற்கான திட்டத்தின் தோற்றம், அதன் ஒப்புதல் விவரங்கள், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், தனிநபர்கள் மற்றும் அரசு துறைகள் மற்றும் பயன்பாட்டை உருவாக்குவதில் ஈடுபட்டுள்ள தனியார் நபர்களிடையேயான தகவல்தொடர்புகளின் நகல்கள் போன்ற விவரங்களை அவர் கேட்டிருந்தார்.

இதையடுத்து Https://aarogyasetu.gov.in/ என்ற வலைத்தளம் gov.in என்ற டொமைன் பெயருடன் எவ்வாறு உருவாக்கப்பட்டது என்பது குறித்து எழுத்துப்பூர்வமாக விளக்குமாறு மத்திய தகவல் ஆணையம் சிபிஐஓ, தேசிய தகவல் மையத்தை கேட்டது.

மனுவில் கேட்கப்பட்ட  கேள்விக்கு பதில் அளிப்பது சம்பந்தமாக அவரது மனு பல்வேறு துறைகளை சென்று வந்ததாக கூறப்படுகிறது.  சுமார் 2 மாதங்கள் அந்த மனு குறித்து, மத்தியஅரசின் பல்வேறு துறை பதில் தெரிவிக்க மறுத்து, மற்றத்துறைக்கு மாற்றி மாறி அனுப்பியதும் அம்பலமாகி உள்ளது.

இந்த செயலியை தேசிய தகவல் மையம் உருவாக்கியதாக முதலில் கூறப்பட்ட நிலையில், ஆர்டிஐ கேள்விக்கு பதில் தெரிய என்று தேசிய பயன்பாட்டு மையம் தெரிவித்து உள்ளது. அதன் பதிலில்,  ” செயலிடியின் பயன்பாட்டை உருவாக்குவது தொடர்பான முழு கோப்பும் என்ஐசியுடன் இல்லை” என்று கூறியதாக கூறப்படுகிறது.

அதுபோல, ஐ.டி அமைச்சகம் இந்த கேள்வியை தேசிய மின்-ஆளுமை பிரிவுக்கு மாற்றியது, மனுவில்  “கோரப்பட்ட தகவல்கள் (எங்கள் பிரிவு) தொடர்பானது அல்ல.” என்று தனது பங்குக்கு கைகாட்டியுள்ளது. இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இதையடுத்து, கோபமடைந்த மத்திய தகவல் ஆணையம், தகவல் அறியும் உரிமைச் சட்டம் பிரிவு 20-ன் கீழ் உரிய பதில் அளிக்காத சிபிஐஓக்கள், மின்னணு அமைச்சகம், தேசிய தகவல் மையம், நெஜிடி ஆகியவற்றுக்கு ஏன் அபராதம் விதிக்கக்கூடாது என விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது

மேலும் ஆரோக்யா சேது இணையதளம் குறித்து தேசிய தகவல் மையத்திடம் எந்த தகவலும் இல்லை என்பது எப்படி என்பதை விளக்கவும் மத்திய தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இவ்விவாகரம் குறித்து, அடுத்த மாதம் மத்தியஅரசின் குறிப்பிட்ட துறையின் தலைமை அதிகாரிகள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

ஆரோக்கிய சேது விவகாரம் ஆரோக்கியமற்ற நிலையில் இருப்பது இதன்மூலம் தெரிய வந்துள்ளது.