இலங்கை கிறிஸ்தவ கோவில் குண்டுவெடிப்பில் 45 சிறுவர்கள் பலியான சோகம்! யுனிசெப் அதிர்ச்சி தகவல்
கொழும்பு:
கடந்த ஞாயிற்றுக்கிழமை இலங்கை கிறிஸ்தவ கோவில்களில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பில் 45 சிறுவர்கள் பலியாகி உள்ளனர் என்று யுனிசெப் அதிர்ச்சி தகவலை தெரிவித்து உள்ளது/
ஈஸ்டர் பண்டிகை கொண்டாட்டத்தின்போது, இலங்கையில் உள்ள நீர்கொழும்பு பகுதியில் செபஸ்தியார் ஆலயத்தில் நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலில் ஏராளமானோர் பலியாகினர். அன்றைய தினம் இலங்கையின் எட்டு இடங்களில் தொடர் குண்டுவெடிப்பு நடைபெற்றது.
இந்த தாக்குதலில், இதுவரை 321 பேர் பலியாகி இருப்பதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ள நிலையில், 500 பேர் வரையிலும் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில், குண்டுவெடிப்புக்கு கண்டனம் தெவித்துள்ள யுனிசெப், இந்த தாக்குதல்களில் இறந்தவர்களில் 45 பேர் சிறுவர்கள் என்றும் ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் (United Nations Children’s Fund or UNICEF) அமைப்பின் செய்தித் தொடர்பாளர் கிறிஸ்டோப் போலியாரக் அதிர்ச்சி தகவலை தெரிவித்து உள்ளார்.