கோவை: சி.பி.எம்., அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு

கோவை :

கோவை, காந்திபுரத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை காந்திபுரம் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகமான கே.ரமணி நினைவகம் உள்ளது. இங்கு இன்று காலை மர்ம நபர்கள் சிலர் பெட்ரோல் குண்டை வீசி தப்பி ஓடிவிட்டனர்.

பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் அங்கு நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்று சேதமடைந்தது.
இந்த சம்பவம் குறித்து  போலீஸாரிடம் புகார் அளிக்கப்பட்டது. தற்போது போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அந்தப் பகுதியில்  பொருத்தப்பட்டுள்ள சிசி டிவி கேமராக்களில் பதிவாகியுள்ள காட்சிகள் ஆராயப்படுகின்றன.

You may have missed