ஆசிரியைகளுக்கு சீருடை: காமராஜர் நடைமுறையை மீண்டும் அமல்படுத்தும் செங்கோட்டையன்!

--

சென்னை:

ரசு பள்ளி ஆசிரியர்களுக்கு சீருடை முறையை மீண்டும் நடைமுறைப்படுத்த தமிழக கல்வி அமைச்சர் செங்கோட்டையன் முயற்சி செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

(மாதிரி படம்)

பெரும்பாலான தனியார் பள்ளிகளில் வேலை செய்யும் ஆசிரியைகள் சீருடையிலேயே பணி யாற்றி வருகின்றனர். அதுபோல தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளிலும் முன்பு வாரத்திற்கு ஒரு முறை சீருடை அணியும் முறை நடைமுறையில் இருந்தது. பின்னர், இந்த நடைமுறை  கொஞ்சம் கொஞ்சமாக தவிர்க்கப்பட்டு, பெரும்பாலானா ஆசிரியைகள் ஏனோதானேவென்றே உடை அணிந்து பள்ளிகளில் பணியாற்றி வருகின்றனர்.

இந்த நிலையில், பள்ளி மாணவர்களை போல இனி ஆசிரியர் ஆசிரியைகளும் சீருடை அணிய வேண்டும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நடைமுறை முதன்முதலாக காமராஜர் ஆட்சி காலத்தின்போது,  மாணவர்களிடையே ஏற்றத் தாழ்வு இருக்கக்கூடாது என்பற்காக சீருடைகள் அறிமுகப்படுத்த நிலையில், ஆசிரியர்களும் அதுபோல சீருடைய அணிய வேண்டும் என்று நடைமுறைப்படுத்தினார்.

தற்போது அந்த நடைமுறையை மீண்டும் கொண்டு வர அமைச்சர் செங்கோட்டையன் முயற்சி எடுத்து வருகிறார். பள்ளி மாணவர்கள் ஒழுக்கத்தை ஆசிரியர்களிடமிருந்துதான் கற்றுக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வரும் நிலையில், பள்ளி  மாணவர்களைப் போல ஆசிரியை களும்  பள்ளிக்கு சீருடை அணிந்து வர வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நடைமுறை விரைவில் நடைமுறைப்படுத்தப் படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

You may have missed