திமுக இளைஞர் அணியில் ஒன்றிய கிளை – பகுதி – நகர – பேரூர் நிர்வாகிகள் நியமனம்… உதயநிதி ஸ்டாலின்

சென்னை:

திமுக இளைஞர் அணி விரிவுப்படுத்தப்படுகிறது; ஒன்றிய கிளை – பகுதி – நகர – பேரூர் வட்டங்களில் நிர்வாகிகள் நியமனம்”  செய்யப்பட உள்ளதாக  திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்து உள்ளது.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதவாது,

கழக இளைஞர் அணிக்கு பெருமளவில் உறுப்பினர்கள் சேர்ந்து வருவதால், அமைப்பினை விரிவுபடுத்த வேண்டியதுஅவசியமாகிறது.

இதையடுத்து,  ஒன்றிய கிளை – பகுதி – நகர – பேரூர் வட்டங்களில் இளைஞர் அணிக்கு அமைப்பை ஏற்படுத்த தலைமைக்கழகம் ஒப்புதல் வழங்கி உள்ளது.

ஒன்றியக்கிளைகள், பகுதி, நகர, வட்டங்களில் ஓர் அமைப்பாளர், 3 துணை அமைப்பாளர்களும், பேரூர் வட்டங்களில் ஓர் அமைப்பாளர், இரண்டு துணை அமைப்பாளர்கள் கொண்டு இளைஞரணி அமைப்புகளை ஏற்படுத்தும் பணிகளில் மாவட்ட அமைப்பாளர்கள், தத்தமது மாவட்டச் செயலாளர்களுடன் கலந்துபேசி ஈடுபடுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்து உள்ளார்.