டில்லி

ன்று 2019-20 ஆன் ஆண்டின் நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து வருகிறார்.

இன்று தாக்கல் செய்யப்பட்டு வரும் நிதி நிலை அறிக்கையின் முக்கிய விவரங்களின் இரண்டாம் பகுதி இதோ

அனைத்து கிராமத்திலும் வரும் 2022 க்குள் மின் மற்றும் எரிவாயு இணைப்பு முழுமையாக பெரும்.

பிரதமர் வீட்டு வசதி திட்டம் 2 அறிமுகம் செய்யப்பட்டு 1.9 கோடி வீடுகள் கட்டபப்டும்.

இந்த திட்டத்தின் கீழ் சராசரியாக 314 நாட்களுக்குள் வீடுகள் கட்டி முடிக்கபடும்.

ரூ. 80250 கோடி செலவில் கிராமப்புற சாலைகள் முன்றாம் கட்டமாக மேம்படுத்தப்படும்.

பாரம்பரிய தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டு அதிக உற்பத்தி மற்றும் அதிக வேலைவாய்ப்புக்கு வழி செய்யபடும். அத்துடன் நூறு புதிய கலை மையங்கள் தொடங்கபட்டு 50000 கலைஞர்களுக்கு உதவி வழங்கப்படும்.

அனத்து கிராமங்களிலும் ஒவ்வொரு வீட்டுக்கும் வரும் 2024 க்குள் குடிநீர் இணைப்பு வழங்கப்படும்

இது வரை 9.6 கோடி கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன. இதுவரை கழிப்பறை வசதிகளில்லாதோருக்கும் அந்த வசதி நீட்டிக்கப்படும்.

கிராமப்புற எழுத்தறிவு திட்டம் விரிவு படுத்தப்படும்.

நகர்ப்புறங்களில் இதுவரை 81 லட்சம் வீடுகள் கட்டித் தருவதாக சொல்லப்பட்டுள்ளது. அதில் 47 லட்சம் வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. அதில் 24 லட்சம் வீடுகள் குடிபுக தயாராக உள்ளன.

நகர்ப்புற ரெயில்வே சேவைகள்மேலும் விஸ்தரிக்கப்படும்.