கொரோனா அச்சுறுத்தல்: சுமார் 3அடி இடைவெளியில் மோடி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்…

டெல்லி:

நாடு முழுவதும் பரவி கொரோனா வைரஸ் தொற்று தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட பிரதமர் உள்பட அமைச்சர்கள், அதிகாரிகள் சுமார் 3 அடி இடைவெளி தூரத்தல் அமர்ந்து ஆலேசனை நடத்தினர். கொரோனா பரவலை தடுக்கும் நோக்கில் இந்த முறையில்ஆலோசனை நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

இந்த  அவசர அமைச்சரவைக் கூட்டத்தில்,  நாடு முழுவதும் ஊரடங்கு நடைமுறையில் உள்ள நிலையில், மேற்கொண்டு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்களை குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.