பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்: அனைத்து கட்சி கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு
டில்லி,
பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் வரும் 18ந்தேதி தொடங்க உள்ள நிலையில் வரும் 17ந்தேதி அனைத்து கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளார்.
பாராளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் வரும் (ஜூலை) 18ந்தேதி தொடங்கி ஆகஸ்டு 10ந்தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
தொடங்க உள்ள பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் முத்தலாக் மசோதா உள்பட பல்வேறு மசோதாக்கள் நிறைவேற்றப்பட உள்ளது.
கூட்டத்தொடரை அமைதியாக நடத்துவது தொடர்பாகவும், கூட்டத்தை சுமூகமாக நடைபெற ஒத்துழைப்பு வழங்க கோருவது குறித்து விவாதிக்க அனைத்து கட்சி தலைவர்களுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.
அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தொடங்க உள்ள மழைக்காலக் கூட்டத் தொடரில் எதிர்க்கட்சிகளின் காரசார விவாதங்கள் அனல்பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.