லக்னோ:

கர்நாடக மாநில அரசியலில் ஏற்பட்ட குழப்பத்துக்கு பொறுப்பேற்று மத்திய அரசு பதவி விலக வேண்டும் என உத்தரபிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

அதில்,‘‘இன்று பண அதிகாரத்தை மக்களின் தீர்ப்பு வெற்றி கண்டுள்ளது. பணத்தால் எல்லோரையும் விலைக்கு வாங்கி விடலாம் என்று நினைப்பவர்களும், அரசியலை வியாபாரமாக்க விரும்பாதவர்களும் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள் என்று பாடம் கற்றுள்ளனர். இதற்கு தார்மீக பொறுப்பேற்று மத்திய அரசு பதவி விலக வேண்டும்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.