டெல்லி: ரூ.2 கோடி வரையிலான கடனுக்கு, வட்டிக்கு வட்டி வசூலிக்கப்படாது என  உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பிரம்மான பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

கொரோனாவால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காலத்தில், மாதத் தவணை செலுத்தாத வாடிக்கையாளர்களிடம் வட்டிக்கு வட்டி வசூலிக்கப்படுவதாக உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இதற்கிடையில்,  கொரோனா நெருக்கடி காரணமாக, கடனாளர்களின் மாதாந்திர நிலுவைத் தொகை செலுத்துவதை நிறுத்தி வைக்கும் சலுகையை ஆகஸ்ட் 31 வரை நீட்டிக்க, வங்கிகளுக்கு, இந்திய ரிசர்வ் வங்கி அனுமதியளித்து இருந்தது. ஆனால், ஆனால் அதற்கான வட்டிக்கு வட்டி வசூலிக்கப்படும் என வங்கிகள் அறிவித்து சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் கடந்த மாதம் நடைபெற்ற விசாரணையின்போது,  வட்டிக்கு வட்டி முறையை ரத்து செய்ய முடியாது என திட்டவட்டமாக தெரிவித்த மத்திய அரசு, இஎம்ஐ கடனை செலுத்தும் கால அவகாசத்தை 2 ஆண்டுகள் வரை நீடிக்க தயாராக இருப்பதாக  கூறியிருந்தது.

இதனையடுத்து, ஆகஸ்ட் 31 வரை இஎம்ஐ கட்டாதோரை கடன் செலுத்தாதவர்கள் பட்டியலில் சேர்க்கக் கூடாது என உத்தரவிட்ட நீதிபதிகள், மாதத் தவணையின் வட்டிக்கு வட்டி வசூலிக்கும் விவகாரத்தில் மத்திய அரசு சரியான முடிவு எடுக்க வேண்டும் என்றும், கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரமே பாதிக்கப்பட்டுள்ளதால், கடனையே செலுத்த மக்கள் கஷ்டப்பட்டுக்கொண்ருக்கும் வேளையில், வட்டிக்கு வட்டி போடுவது சரியல்ல என்று தெரிவித்ததுடன், இது தொடர்பாக முடிவெடுக்க கால அவகாசம் வழங்கியிருந்தனர். இது தொடர்பாக மத்தியஅரசு பிரம்மாண பத்திரம் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தனர்.

இந்த நிலையில், வழக்கு இன்று  மீண்டும் விசாரணை வந்தது. அப்போது மத்தியஅரசு சார்பில் பிரம்மாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதில், ரூ.2 கோடி வரையிலான கடனுக்கு வட்டிக்கு வட்டி வசூலிக்கப்போவதில்லை என மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

சிறுகுறு தொழில்கள், (MSME)கடன்கள், கல்வி கடன்கள், வீட்டுக் கடன்கள், நுகர்வோர் நீடித்த கடன்கள், கிரெடிட் கார்டு பாக்கிகள், வாகனக் கடன்கள், தொழில் வல்லுநர்களுக்கான தனிநபர் கடன்கள் மற்றும் நுகர்வு கடன்கள் அனைத்தும் இந்த  ரூ .2 கோடி வரையிலான கடன்களில் அடங்கும் என்றும் தெரிவித்து உள்ளது.

மேலும், “ஆறு மாத கால இடைவெளியில் கூட்டு வட்டி தள்ளுபடி செய்வதற்கான நிவாரணம்  தொடர்பாக, ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும், மிகவும் பாதிக்கப் பட்டுள்ள, கடன் வாங்கியவர்களுக்கு வட்டி தள்ளுபடி செய்வது குறித்து அரசாங்கம் முடிவு செய்யும் என்றும்  மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இது கடன் வாங்குபவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான தற்காலிக தீர்வு மட்டுமே  என்று தெரிவித்துள்ள ரிசர்வ் வங்கி, இதில் நீண்ட கால தடை விதிக்கப்பட்டால், அது  கடன் வாங்குபவர்களின் கடன் நடத்தையை பாதிக்கும் மற்றும் பணம் செலுத்தும்போது ஏற்படும் அபாயங்களை அதிகரிக்கும் என்றும் எச்சரித்துள்ளது.

அத்துடன், இதுபோன்ற  கூட்டு வட்டியைத் தள்ளுபடி செய்வதன் விளைவாக ஏற்படும் சுமையை வங்கிகள் தாங்க முடியாது என்றும், அது ‘அவர்களின் நிகர மதிப்பில் கணிசமான மற்றும் முக்கிய பகுதியை அழித்துவிடும் என்றும் இது எதிர்காலத்தில் கடுமையான கேள்விக்குறியை எழுப்பும் என்றும் அச்சம் தெரிவித்து உள்ளது.

இந்த சுமையானது, ஏற்கனவே கொரோனா தொற்று மற்றும், இயற்கையாகவே நாடு எதிர்கொள்ளும் பல முக்கிய கடமைகளில் தாக்கத்தை ஏற்படுத்தும், நேரடி செலவுகளைச் அதிகரிக்கும் என்றும் கூறியுள்ளது.

தற்போதைய நிலையில்,  இதற்கு “ஒரே தீர்வு,  கூட்டு வட்டி தள்ளுபடி செய்வதன் விளைவாக அரசாங்கம் சுமையை சுமக்கிறது. இந்தச் சுமையைச் சுமக்கும் அரசாங்கம் இயற்கையாகவே தேசம் எதிர்கொள்ளும் பல முக்கிய கடமைகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் இந்த மாண்புமிகு நீதிமன்றம் திருப்தி அளிக்கும், இதில் தொற்றுநோய் நிர்வாகத்துடன் தொடர்புடைய நேரடி செலவுகளைச் சந்தித்தல், சாமானிய மக்களின் அடிப்படைத் தேவைகளை நிவர்த்தி செய்தல் மற்றும் பொதுவானவற்றைத் தணித்தல் வாழ்வாதார இழப்பு காரணமாக எழும் மனிதனின் பிரச்சினைகள் ”என்று மத்திய அரசு தனது பிரமாணப் பத்திரத்தில் கூறியுள்ளது.