டெல்லி:
மே3ந்தேதிக்கு பிறகு கொரோனா பாதிப்பு தொடர்பான சிவப்பு, ஆரஞ்சு, பச்சை மண்டலங்கள் குறித்து புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்தியஅரசு அறிவித்து உள்ளது.  அதன் விவரங்களை  மாநில தலைமைச்செயலாளர்களுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் பிரித்தி சூதன் கடிதம் மூலம் தெரிவித்து உள்ளார்.
அதன்படி, பச்சை மண்டலங்களாக அறிவிக்க இனி  21 நாட்களே போதும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
நாடு முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக ஊரடங்கு அமல்படுத்தப் பட்டு உள்ளது. கடந்த மாதம் 14ந்தேதிக்கு பிறகு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில், தொற்று பாதிப்பைத் தொடர்ந்து,  பச்சை, ஆரஞ்சு மற்றும் சிவப்பு நிறமாக அடையாளப்படுத்தப்பட்டது

அதன்படி 28 நாட்கள் கொரோனா பாதிப்பு இல்லாத மண்லங்கள்  கொரோனதொற்று இல்லாத பச்சை மண்டலமாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் மே 3ந்தேதியுடன் 2வது கட்ட ஊரடங்கும் பல்வேறு கட்டுப்பாடுகளுடன்  விலக்கிக்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நலையில்,  பச்சை, ஆரஞ்சு மற்று சிவப்பு நிற மண்டலங்கள் குறித்து மத்திய அரசு புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது.
அதன்படி, தற்போது 28 நாட்கள் என்கிற கால அளவினை 21 நாட்களாக மத்திய அரசு குறைத்துள்ளது. அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்களுக்கு மத்திய சுகாதார அமைச்சக செயலாளர் பிரித்தி சூதன் இது தொடர்பாக கடிதம் எழுதி உள்ளார்.
அந்த கடிதத்தில்,  ஏப்ரல் 15 மற்றும் 30 தேதிகளுக்கு மத்தியில் நாட்டில், அதிக தொற்று உள்ள பகுதிகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் மொத்தம் 130 பகுதிகள் சிவப்பு மண்டலங்களாகவும்,  284 பகுதிகள் ஆரஞ்சு மண்டலங்களாகவும்,  319 பகுதிகள் பச்சை மண்டலங்களாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளன.
சிவப்பு மண்டலங்களின் எண்ணிக்கையானது 170 லிருந்து 130 ஆக குறைந்துள்ளதாக, அதாவது சுமார் 23 சதவிகிதம் குறைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 
பச்சை மண்டலங்களின் எண்ணிக்கையும் 356லிருந்து 319 ஆக குறைந்துள்ளதாகவும், பாதிப்பு ஏற்படாத பகுதிகளிலும் புதியதாகப் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை குறிப்பிட்டுள்ளது.

தலைநகர் டெல்லி, மும்பை, சென்னை உள்பட  எட்டு மெட்ரோ நகரங்கள் சிவப்பு பகுதிகளாக உள்ளன. இ டெல்லி மற்றும் மும்பையில் மட்டுமே 10,000க்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மகாராஷ்டிரா, தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் 10க்கும் அதிகமான சிவப்பு மண்டலங்கள் உள்ளன.  அதிகபட்சமாக உத்தரப் பிரதேசத்தில் 19 சிவப்பு மண்டலங்களும், மகாராஷ்டிராவில் 14 சிவப்பு மண்டலங்களும் உள்ளன.
வடகிழக்கு மாநிலங்களில் அருணாச்சலப் பிரதேசத்தில் 25 பச்சை மண்டலங்களும், அசாமில் 30 பச்சை மண்டலங்களும் உள்ளன.

ஏப்ரல் மாத்தில் சிவப்பு மண்டலங்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளதாக மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.

இந்த பச்சை மண்டலங்கல்  கடைகள் திறக்கப்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆயினும், வணிக வளாகங்கள் திறப்பதற்கு அனுமதி இல்லை.
சிவப்பு மண்டலங்களில் தற்போது நடைமுறையில் உள்ள கடுமையான நடவடிக்கைகள் தளர்த்தப்படமாட்டாது.
மே 3-ம் தேதியுடன் முழு முடக்க நடைமுறை முடிவுக்கு வருகின்ற நிலையில், சில தளர்வுகள் அனுமதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.