டில்லி:

ம்மு – காஷ்மீர் மாநிலத்தில், 919 பேருக்கு வழங்கப்பட்டு வந்த காவல்துறை பாதுகாப்பு திரும்ப பெறப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

காஷ்மீர் மாநிலத்தில் நிகழ்ந்து வரும்  பயங்கரவாத நடவடிக்கை காரணமாக மாநிலத்தின் உள்ள அரசியல் கட்சி தலைவர்கள், பிரிவினைவாத அமைப்புகளை சேர்ந்த சிலருக்கும், பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. பாதுகாப்பு பணியில்  ஆயிரக்கணக்கான போலீசார் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.  இதனால், அரசுக்கு ஆண்டு தோறும், பல கோடி ரூபாய் செலவாகிறது.

இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சம் ஆய்வு செய்தது. இதில், பலருக்கு தேவையின்றி, போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது தெரிய வந்தது. அதையடுத்து,  தகுதியற்ற நபர்களுக்கு வழங்கப்பட்டு வரும் போலீஸ் பாதுகாப்பை திரும்ப பெறும்படி, மாநில அரசுக்கு, மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது.

அதைத்தொடர்ந்து, காஷ்மீர் மாநிலத்தில் இதுவர, 919 பேருக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு திரும்ப பெறப்பட்டு உள்ளது. இதன்மூலம், 2,768 போலீசார், அந்தப் பணியிலிருந்து விடுவிக்கப் பட்டு, பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் உபயோகப்படுத்தி வந்த 389 பாது காப்பு வாகனங்களும் திரும்பப் பெறப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

குறிப்பாக பிரிவினா வாத கட்சிகளின் தலைவர்களான ஒமர் பரூக், அப்துல் கனி பட், பிலால் லோன், ஹஷிம் குரேஷி, பஸல் ஹக் குரேஷி, ஷபீர் ஷா உள்பட 22 பேர் மற்றும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள், 155 பேருக்கும் பாதுகாப்பு திரும்ப பெறப்பட்டுள்ளது.