விசாரணை கமிஷன் அமைக்கும் அதிகாரம் டில்லி அரசுக்கு கிடையாது….அருண்ஜெட்லி

டில்லி:
‘‘உச்சநீதிமன்ற உத்தரவில், குற்ற வழக்கு விசாரணை கமிஷன் அமைக்கும் அதிகாரம் டில்லி அரசுக்கு வழங்கப்படவில்லை’’ என்று மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி தெரிவித்துள்ளார்.

2015ம் ஆண்டில் டில்லி கிரிக்கெட் சங்கம் மற்றும் சிஎன்ஜி பிட்னஸ் ஊழல் குறித்து விசாரிக்க தனி விசாரணை கமிஷன் அமைத்து அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான டில்லி அரசு உத்தரவிட்டது. ஆனால், இந்த உத்தரவு சட்டவிரோதம் என்று 2016ம் ஆண்டில் டில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், டில்லியில் துணை நிலை ஆளுநருக்கு அதிகாரமா? அல்லது டில்லி அரசுக்கு அதிகாரமா? என்ற வழக்கில் உச்சநீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. டில்லி அரசுக்கு சாதமாக வழங்கப்பட்டுள்ள இந்த தீர்ப்பு குறித்து மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி இன்று பேஸ்புக்கில் கருத்து தெரிவித்துள்ளார்.

அதில், ‘‘டில்லியில் போலீசாருக்கு அதிகாரம் கிடையாது. அதனால் கடந்த காலங்களில் நடந்த குற்ற வழ க்குகள் குறித்து விசாரிக்க விசாரணை கமிஷன் அமைக்க முடியாது. அதேபோல் அரசு அதிகாரிகள் நியமனம் மற்றும் இடமாற்றம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் தான் வரும். டில்லி அரசுக்கு ஆதரவாக தீர்ப்பு வந்துள்ளது என்று கூறுவது முழுக்க முழுக்க தவறானதாகும். மேலும், இதர மாநிலங்களோடு டில்லியை ஒப்பிடக் கூடாது என்று தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதனால் யூனியன் பிரதேச பிரிவு அதிகாரிகள் நியமனத்தை டில்லி அரசு முடிவு செய்யலாம் என்பது முற்றிலும் தவறானதாகும். இதில் இன்னும் பல விஷயங்கள் கருத்தில் கொள்ளப்படவில்லை. அதனால் அமைதியாக இருப்பதால் ஒரு கருத்தை ஏற்றுக் கொண்டதாக கருதக்கூடாது’’ என்று தெரிவித்துள்ளார்.

மேலும், அந்த பேஸ்புக் பதிவில், ‘‘மாநில அரசு அல்லது மத்திய அரசுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அல்லது வழங்கப்படவில்லை. அல்லது முந்தைய நிலையே தொடரும் என்பது மு க்கியமல்ல. தேர்வு செய்யப்பட்ட அரசுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பது தான் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், யூனியன் பிரதேசமாக உள்ள டில்லியை பொறுத்தவரை அதிகாரம என்பது மத்திய அரசிடம் தான் இருக்க வேண்டும். ஜனநாயக நலன் மற்றும் கூட்டாட்சி கொள்கைகளின் அடிப்படையில் மாநில அரசில் உள்ள அதிகாரத்தை துணை நிலை ஆளுநர் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

துணை நிலை ஆளுனர் மற்றும் டில்லி அரசின் கருத்துக்கள் அடிப்படையில் தான் மத்திய அரசு முடிவு எ டுக்கும். டில்லி மாநிலம் கிடையாது. அதனால் மாநில அரசுகளுக்கு வழங்கப்படும் அதிகாரம் டில்லியில் தேர்வு செய்யப்பட்ட அரசுக்கு உண்டு என்று நினைத்துக் கொள்ளக் கூடாது. அதேபோல் மற்ற மாநிலங்களில் உள்ளது போல் துணை நிலை ஆளுநர் இங்கே இருக்க முடியாது. இங்கு அவர் நிர்வாக அதிகாரம் கொண்டவர்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.