சுவிஸ் வங்கி டெபாசிட் அனைத்தும் கருப்பு பணம் கிடையாது… அருண்ஜெட்லி

டில்லி:

இந்தியர்களின் சுவிஸ் வங்கி டெபாசிட்கள் அனைத்தும் கருப்பு பணம் கிடையாது என்று மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி கூறினார்.

2017ம் ஆண்டில் சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் டெபாசிட் அதிகரித்திருப்பதாக அந்நாட்டு தேசிய வங்கி தெரிவித்துள்ளது. சுவிஸ் உள்ளிட்ட வெளிநாடுகளில் உள்ள கருப்பு பணத்தை மீட்டு இந்தியா கொண்டுவருவோம் என்று கடந்த லோக்சபா தேர்தலில் மோடி உறுதியளித்திருந்தார். ஆனால் இது நடக்கவில்லை. மாறாக டெபாசிட் அதிகரித்துள்ளது. இதற்கு எதிர்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

இந்நிலையில் இது குறித்து மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி கூறுகையில்,‘‘சுவிஸ் வங்கியில் இந்தியர்கள் டெபாசிட் செய்துள்ள அனைத்து தொகையும் கருப்பு பணம் என்று கணக்கில் கொள்ள முடியாது. சுவிஸ் வங்கிகளில் சட்டவிரோதமாக இந்தியர்கள் டெபாசிட் செய்திருந்தால் கடுமையான சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும். அடுத்த ஆண்டு ஜனவரி முதல் வங்கி கணக்கு தகவல்களை பரிமாறிக் கொள்ள சுவிஸ் அரசு சம்மதித்துள்ளது.

அதன் பிறகு சட்ட விரோத டெபாசிட் செய்துள்ள இந்தியர்கள் மீது கருப்பு பண சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் டெபாசிட் அதிகரித்துள்ளது என்று தான் செய்தி வெளியாகியுள்ளது. ஆனால், இது மத்திய அரசின் கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கைக்கு எதிராக திசை திருப்பப்படுகிறது’’ என்று தெரிவித்துள்ளார்.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Union Minister Arun Jaitley today said it would be wrong to assume that all money deposited in the Swiss Banks is illegal, சுவிஸ் வங்கி டெபாசிட் அனைத்தும் கருப்பு பணம் கிடையாது... அருண்ஜெட்லி
-=-