மேற்குவங்கத்தில் பயங்கரம்: மத்தியஅமைச்சர் மீது தாக்குதல் நடத்திய ஜாதவ்பூர் பல்கலைக்கழக மாணவர்கள்!

கொல்கத்தா:

மேற்குவங்கத்தில் உள்ள ஜாதவ்பூர் பல்கலைக்கழக நிகழ்ச்சிக்கு சென்ற மத்தியஅமைச்சர் பாபுல் சுப்ரியோவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சில மாணவர்கள் தாக்குதல் நடத்தினர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மாணவர்களின் எதிர்ப்பை மீறி மத்தியஅமைச்சர் சுப்ரியோ கல்லூரிக்குள் செல்ல முயன்றதால், அவரின்  தலைமுடியை பிடித்து இழுத்து தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.

மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல்துறை அமைச்சராக இருப்பவர்  பாபுல் சுப்ரியோ. கொல்கத்தா ஜாதவ்பூரில் உள்ள பல்கலைக்கழகத்தில் இன்று ஆர்எஸ்எஸ் மாணவர் அமைப்பான ஏபிவிபி சார்பில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றார்.

இதற்கு  கம்யூனிஸ்ட் கட்சியின் எஸ்எப்ஐ, அனைத்து இந்திய மாணவர் அமைப்பு ஆகியோர் எதிர்ப்புத் தெரிவி்த்து பல்கலைக்கழகத்துக்குள் வராமல் திரும்பிப்போகக் கூறி ஆர்ப்பாட்டம் நடத்தினார். ஆனால், மத்திய இணையமைச்சர் பாபுல் சுப்ரியா அதை கண்டுகொள்ளாமல் கல்லூரிக்கு வந்தார்.

இதனால் ஆத்திரம் அடைந்த மாணவர்கள்  பாதுகாவலர்களை மீறி  அமைச்சர் பாபுல் சுப்ரியோ வின்  தலைமுடியைப்பிடித்து இழுத்து தாக்கியதாகக்கூறப்படுகிறது. இதன் காரணமாக அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அமைச்சரின்  பாதுகாவலர்கள் மாணவர்களிடம் இருந்து அமைச்சரவை மீட்டனர்.

இந்த சம்பவம் குறித்து கூறிய மத்திய அமைச்ச்ர பாபுல் சுப்ரியோ,  “ மாணவர்களால் நான் கடுமையாக மாணவர்களால் தாக்கப்பட்டேன், என் முகத்தில் குத்தினார்கள், எட்டி உதைத்தார்கள். ஜாதப்பூர் பல்கலைக்கழக மாணவர்களிடம் இருந்து இதை முற்றிலும் எதிர்பார்க்கவில்லை என்று கூறி உள்ளார்.

நிகழ்ச்சி முடிந்து காரில் செல்ல முயன்றபோதும்,  மத்திய அமைச்சர் மீது மீண்டும் மாணவர்கள் தாக்குதல் நடத்தி அவர் அணிந்திருந்த கண்ணாடியை பிடுங்கி எறிந்தனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மாநில ஆளுநர் ஜெகதீப் தங்கார் பல்கலைக்கழகத்துக்கு விரைந்து வந்து மத்திய அமைச்சர் பாபுல் சுப்ரியாவை அழைத்துச் சென்றார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதன் காரணமாக பல்கலைக்கழக வளாகத்தல் வன்முறை ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. அங்கு காவல்துறையினர் அங்கு குவிக்கப்பட்டு உள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து முதல்வர் மம்தா பானர்ஜி கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. மேலும், அமைச்சர் மீது தாக்குதல் நடத்தியது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்