கோரக்நாத், உ.பி.

த்திய அமைச்சர் சத்யபால் சிங் “ஜீன்ஸ் அணிந்து மணமேடைக்கு வரும் மணமகளை எந்த மணமகன் திருமனம் செய்துக் கொள்வார்?” என வினவி உள்ளார்.

பாஜக ஆளும் உத்திரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கோரக்பூர் கோவிலின் தலைமை அர்ச்சகராக உள்ளார்.  இங்குள்ள மகராணா பிரதாப் சிங் எஜுகேஷனல் ட்ரஸ்ட் என்னும் கல்வி நிறுவனத்தை யோகி நிறுவி உள்ளார்.   இந்த நிறுவனத்தின் நிறுவன தினக் கொண்டாட்டத்தில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் சத்யபால் சிங் நேற்று கலந்துக் கொண்டு உரையாற்றி உள்ளார்.

அவர் தனது உரையில், “கோயிலில் பூஜை செய்யும் அர்ச்சகர்கள் ஜீன்ஸ் அணிந்துக் கொண்டு பூஜை செய்வேன் என்றால் எத்தனை பேர் ஒப்புக் கொள்வார்கள்?  ஒருவரும் ஒப்புக் கொள்ள மாட்டார்கள்.    அதே போல் ஒரு பெண் மணவறையில் ஜீன்ஸ் அணிந்துக் கொண்டு தான் வருவேன் என்றால் எத்தனை இளைஞர்கள் அவளை திருமணம் செய்துக் கொள்ள ஒப்புக் கொள்வார்கள்?”  எனக் கேள்வி எழுப்பி உள்ளார்.

அவரது இந்த உரை நாடு முழுவதும் சர்ச்சையை உண்டாக்கி உள்ளது.  இந்த உரையின் போது யோகி இருந்தாரா என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.    சத்யபால் சிங் மும்பை போலீஸில் துணை கமிஷனராக பணி புரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.