ராகுல் ஒரு சாக்கடைப் புழு : மத்திய அமைச்சரின் திமிர் பேச்சு

பாட்னா

த்திய அமைச்சர் அஸ்வினி குமார் சௌபே காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை பைத்தியம் எனவும் சாக்கடைப் புழு எனவும் விமர்சித்துள்ளார்.

மத்திய அமைச்சர் அஸ்வினி குமார் சௌபே சர்ச்சைக்குரிய கருத்துக்களை தொடர்ந்து தெரிவித்து வருகிறார்.   இது காங்கிரஸ் உள்ளிட்ட பல எதிர்க்கட்சிகளுக்கு கோபத்தை ஏற்படுத்தி வருகிறது.   கடந்த 2015 ஆம் வருடம் ஏப்ரல் மாதம் இவர் “ராஜிவ் காந்தி வெள்ளைக்காரியான சோனியாவுக்கு பதிலாக ஒரு நைஜீரியாவை சேர்ந்த கருப்பின பெண்ணை திருமணம் செய்துக் கொண்டிருந்தால் காங்கிரசார் அவரை தலைவியாக ஏற்றுக் கொண்டிருப்பார்களா?” என கேட்டது முதல் சர்ச்சை ஆகும்.

அதை தொடர்ந்து பல  சர்ச்சைக்குரிய விமர்சனங்களை சோனியா மற்றும் ராகுல் மீது அள்ளி தெளித்து வருவது பலருக்கும் அதிருப்தியை உண்டாக்கி வருகிறது.   முன்னாள் காங்கிரஸ் தலைவர் சோனியாவை அரக்கியான பூதகி என்றும் ராகுல் காந்தியை பேராசைப்படும் குழந்தை எனவும் விமர்சித்துள்ளார்.   அது மட்டும் இன்றி பீகார் தேர்தல் நேரத்தில் அப்போதைய கூட்டாளிகளான நிதிஷ் மற்றும் லாலுவை பிரபல கிரிமினல்களான பில்லா – ரங்கா என கூறி இருந்தார்.

தற்போது ரபேல் பேர விமான கொள்முதலில் ஊழல் நடந்துள்ளதாக கூறும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இது குறித்து விளக்கம் அளிக்குமாறு மோடியை கேட்டுள்ளார்.   இது குறித்து சௌபே, “ராகுல் காந்திக்கு பைத்தியம் பிடித்துள்ளது என கருதுகிறேன்.  அவரை உடனடியாக மனநல மருத்துவமனையில்  அனுமதிக்க வேண்டும்.  அவர் பிரதமர் மீது தெரிவித்துள்ள குற்றச்சாட்டுகள் என் மனதை புண்படுத்துகிறது.   பிரதமர் வானளவு உயர்ந்துள்ளார்.  ஆனால் காங்கிரஸ் தலைவர் சாக்கடையில் நெளியும் புழுவாக இருக்கிறார்” என கூறி உள்ளார்.

இதற்கு காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவரான பிரேம் சந்த் மிஸ்ரா, “தவறான அரசியலை மக்களுக்கு எடுத்துரைக்கும் சௌபே ஒரு விஷப் பூச்சிக்கு சமமானவர்.  இதற்கு முன்பே அவர் கஞ்சா உட்கொண்டு தலைவர்களை போதையில் கடுமையாக திட்டி உள்ளார்.   இது போல கஞ்சா உட்கொண்டு அவர் ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத் மற்றும் மோடியையும் போதையில் கேவலமாக விமர்சிக்கும் நாளை எதிர்பார்க்கிறேன்” என தெரிவித்துள்ளார்.