நிகழ்ச்சியின்போது மயங்கி விழுந்த மத்தியஅமைச்சர் நிதின் கட்கரி…. பரபரப்பு

மும்பை:

காராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற கல்லூரி பட்ட மளிப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் நிகழ்ச்சியின் போது திடீரென  மயங்கி விழுந்தார். இதன் காரணமாக சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

மகாராஷ்டிரா மாநிலம், அகமத் நகரில் இன்று நடைபெற்ற கல்லூரி பட்டமளிப்பு விழா நடை பெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கலந்து கொண்டார். அவருடன் மாநில ஆளுநர் வித்யாசாகர் ராவ் மறறும் கல்லூரி துணை வேந்தர் உள்பட பலர் கொண்டனர்.

விழா நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, மேடையில் அமர்ந்திருந்த நிதின் கட்கரி திடீரென மயங்கி விழுந்தார். இதன் காரணமாக பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

மயங்கி விழுந்த நிதின் கட்கரி

தற்போது அவர் நலமோடு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஏற்கனவே சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ள நிதின் கட்கரி, இன்று நிகழ்ச்சியின்போது, அவருக்கு  சர்க்கரை அளவு குறைந்த காரணத்தால் மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து நிதின் கட்கரி தனது டிவிட்டர் பக்கத்திலும் தெரிவித்து உள்ளார். அதில் சர்க்கரை குறைவு  காரணமாக சற்று மயங்கியதாகவும், தனக்கு மருத்துவர்கள் உடடினயாக சிகிச்சை அளித்தனர். தற்போது நலமுடன் இருக்கிறேன். அனைவருக்கும் நன்றி கூறுகிறேன் என்று பதிவிட்டு உள்ளார்.