நில அபகரிப்பு: வழக்கு பதியப்பட்ட மத்திய பா.ஜ.அமைச்சர் பதவி விலக லாலு கட்சி வலியுறுத்தல்

டில்லி,

நில அபகரித்து செய்தாக மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் மீது வழக்கு பதிவு செய்ய பீகார் மாநில நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது பாஜக வினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதையடுத்து, மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் பதவி விலக வேண்டும் என லாலு தலைமையிலான ராஷ்டிடிரய ஜனதா தளம் வலியுறுத்தி உள்ளது.

மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில், சிறு, குறு தொழில் துறை அமைச்சராக இருப்பவர் கிரிராஜ் சிங். இவர் மீது நில அபகரிப்பு செய்தாக பீகாரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பீகார் மாநிலம், பாட்னா அருகே உள்ள  அசோப்பூர் கிராமத்தைச் சேர்ந்த  ராம் நாராயண் என்பவர், மத்திய அமைச்சர் மீது,  தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கான சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

ஏற்கனவே அமைச்சர் உள்பட 33 பேர் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், குற்றச்சாட்டில் மூகாந்திரம் இருப்பதாக கோரி, கிரிராஜ்சிங் உள்பட 33 பேர் மீதும் வழக்கு பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து, மத்திய  அமைச்சர் கிரிராஜ் சிங் மீது தனாப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இது பீகார் மாநில பாஜகவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வழக்கு பதிவு செய்யப்பட்ட மத்திய அமைச்சர் கிரிராஜ்சிங் பதவி விலக வேண்டும் என்று ராஷ்டிரிய ஜனதா தளம் வலியுறுத்தி உள்ளது.

ராஷ்டிரிய ஜனதா தளத்தை சேர்ந்த முன்னாள் முதல்வர் லாலுவின் மகனும் முன்னாள் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ், கிரிராஜ்சிங் பதவி விலக மாநில முதல்வர் நிதிஷ்குமார் மற்றும் துணை முதல்வர் சுஷில் குமார் மோடி வலியுறுத்த வேண்டும் என்று கூறி உள்ளார்.

மத்திய அமைச்சர் ஒருவர்மீது நீதிமன்றம் வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டிருப்பது  பாஜக தலைமையில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

கார்ட்டூன் கேலரி