போராட்டம் நடத்திய தலித்துகளை நாய்கள் என்று கூறிய மத்திய அமைச்சர் அனந்த்குமார் ஹெக்டேவுக்கு எதிர்ப்பு வலுக்கிறது

பல்லாரி:

போராட்டம் நடத்திய தலித்துகளை நாய்கள் என்று விமர்சித்த மத்திய அமைச்சர் அனந்த்குமாருக்கு ஹெக்டேவுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.


மத்திய அமைச்சர் அனந்த்குமார் ஹெக்டே சர்ச்சைக்குரிய பேச்சுகளை தொடர்ந்து பேசி பல தரப்பினரின் கண்டனத்துக்குள்ளாகி வருகிறார்.

கர்நாடக மாநிலம் பல்லாரியின் நடந்த வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள வந்த மத்திய அமைச்சர் அனந்த்குமார் ஹெக்டேவுக்கு எதிராக தலித்துகள் கோஷமிட்டு போராட்டம் நடத்தினர்.

மதசார்பின்மை மற்றும் அரசியல் சாசனத்தை மாற்ற வேண்டும் என்ற அவரது பேச்சுக்கு எதிர்ப்புத் தெரிவித்து இத்தகைய போராட்டத்தை அவர்கள் நடத்தினர்.

இந்த போராட்டம் குறித்து கருத்து தெரிவித்த மத்திய அமைச்சர் அனந்த்குமார் ஹெக்டே, நாங்கள் தைரியசாலிகள். தெருவில் குலைக்கும் நாய்கள் பற்றி எல்லாம் நாங்கள் கவலைப்படமாட்டோம் என்று பேசினார்.

போராட்டம் நடத்திய தலித்துகளை நாய்கள் என்று விமர்சித்த அனந்த்குமார் ஹெக்டேவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

 

You may have missed