தேசிய பாதுகாப்பு ஆலோசருடன் மத்திய அமைச்சர் அக்பர் திடீர் ஆலோசனை

டில்லி:

பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி உள்ள மத்திய அமைச்சரும், முன்னாள் செய்திப்பத்திரிகை ஆசிரியருமான எம்.ஜே.அக்பர், தன்மீது புகார் கூறிய பெண் பத்திரிகையாளர் பிரியா ரமணி மீது கிரிமினல் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கு டில்லி நீதிமன்றத்தில் வரும் 18ந்தேதி விசாரணைக்கு வர உள்ளது. இந்த நிலையில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன் மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் சந்திந்து பேசினார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிரபல பத்திரிக்கையாளராக பணியாற்றி, பின்னர்  பா.ஜனதாவில் இணைந்து  எம்.பி.யாகி, தற்போது இந்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர்  பொறுப்பு வகித்து வரும்  எம்.ஜே.அக்பர் மீது, அவருடன் பணியாற்றிய பெண் பத்திரிகையாளர் பிரியா ரமணி என்பவர் குற்றம்சாட்டி மீடூவில் பதிவிட்டிருந்தார். அதைத் தொடர்ந்து அக்பர் மீது மேலும் பலர்  பாலியல் புகார் கூறி இருந்தனர்.

இந்த விவகாரம்  சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அக்பர் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்று  காங்கிரஸ் கட்சி வலியிறுத்திதியது. ஆனால், தன்மீதான குற்றச்சாட்டு உண்மை இல்லை என்று மறுத்த அமைச்சர் அக்பர், பத்திரிகையாளர் பிரியா ரமணி மீது  கிரிமினல் அவதூறு வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

அமைச்சர் சார்பாக   வழக்கறிஞர் கரன்ஜவாலா, டில்லி பாட்டியாலா நீதிமன்றத்தில்நேற்று வழக்கு பதிவு செய்தார். இந்த வழக்கு நாளை மறுதினம் (18ந்தேதி) விசாரணைக்கு வருகிறது.

இந்த நிலையில், மத்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன் மத்திய அமைச்சர் அக்பர் திடீர் ஆலோசனை நடத்தி வருகிறார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

You may have missed