மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா..?

பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

மத்திய வெளியுறவுத்துறை இணயமைச்சர் இருப்பவர் எம்.ஜே.அக்பர் பத்திரிகையாளராகவும் பணியாற்றியுள்ளார். அந்த நேரத்தில் எம்.ஜே.அக்பர் பல பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாக தற்போது குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.

கிட்டத்தட்ட பத்துக்கும் அதிகமான பெண்கள் மீ டூ மூலம் அக்பர் மீது குற்றம் சுமத்தியிருக்கிறார்கள்.

இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பாலியல் புகாருக்குள்ளான எம்.ஜே.அக்பர் தனது பதவியை விட்டு விலக வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்தும் வலியுறுத்தப்பட்டது.

இந்நிலையில் மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. பிரதமர் மோடிக்கு மின்னஞ்சலில் ராஜினாமா கடிதத்தை எம்.ஜே.அக்பர் அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.