’நாங்கள் ஆட்சிக்கு வருவோம் என எதிர்ப்பார்க்கவில்லை’ நிதின் கட்கரி கூறியது சரிதான்: ராகுல்காந்தி டிவிட்

டில்லி:

பொய்யான வாக்குறுதி கொடுத்தே 2014ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் ஆட்சியை பிடித்தோம், நாங்கள் ஆட்சிக்கு வருவோம் என்று எதிர்பார்க்க வில்லை என்று  மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின்கட்கரி சமீபத்தில் பேசியிருந்தார்.

இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், நிதின் கட்கரியின் ஒப்புதல் வாக்குமூலம் சரிதான் என்று அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கிண்டல் செய்து டிவிட் செய்துள்ளார்.

சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி, கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது நாங்கள் ஆட்சிக்கு வருவோம் என்று எதிர்ப்பார்க்கவில்லை, அதனால் தேர்தல் பிரசாரத்தின் போது நாட்டு மக்களுக்கு பொய்யான வாக்குறுதிகளை அள்ளி வீசினோம்.  ஒரு வேளை நாங்கள் ஆட்சிக்கு வராமல் இருந்திருந்தால் வாக்குறுதிகளுக்கு பதில் அளிக்கத் தேவையில்லை… ஆனால், தற்போது வாக்குளுதிகளை மக்கள் நினைவு படுத்துகிறார்கள்… சிரித்துகொண்டே கடந்து செல்கிறோம்/..  என்று அங்கலாந்திருந்தார்.

அவரது பேச்சு பாஜக தலைமையில் கடுமையான சலசலப்புகளை ஏற்படுத்தி உள்ள நிலையில், காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகளை சேர்ந்த பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நிதின்கட்கரி பேச்சு குறித்து கருத்து தெரிவித்து, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டிவிட் செய்துள்ளார்.

அதில்,  இதுபோன்ற நடைமுறைக்கு சாத்தியமற்ற வாக்குறுதிகளாலேயே பாஜக தேர்தலில் வெற்றி பெற்றதாகவும்  நிதின்கட்காரி கூறிய வீடியோவை காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி டுவிட்டரில் பகிர்ந்து நீங்கள் கூறியவை அனைத்தும் சரியே’ ,  மக்கள் பல கனவுகளை உருவாக்கி அரசாங்கத்தை அமைத்து பேராசையால் பாதிக்கப்படுகிறார்கள் என கூறியுள்ளார்.