ந்தி நடிகர் சுஷாந்த் தற்கொலை செய்து கொண்ட விவகாரம், நட்சத்திரங்களின் போதைப்பொருள் பயன்பாடு, பீகார் தேர்தல், உள்ளூர் அரசியல் வாதிகள் சண்டை என வேறு திசையில் பயணிக்க ஆரம்பித்துள்ளது.

சுஷாந்த் பிரச்சினையில் மூக்கை நுழைத்த நடிகை கங்கனா ரனாவத், மும்பை நகரை ‘ பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீருடன்’ ஒப்பிட்டு பேச, அவர் மீது சிவசேனா கட்சி, பாய்ந்தது.

சிவசேனாவை எதிர்த்து மகாராஷ்டிர மாநிலத்தில் அரசியல் நடத்தி வரும், பா.ஜ.க.வும், இந்திய குடியரசு கட்சியும் கங்கனா பக்கம் நிற்கின்றன.. குடியரசு கட்சியை சேர்ந்த மத்திய அமைச்சரான ராமதாஸ் அதால்வே, கங்கனாவுக்கு தனது , முழு ஆதரவை அளித்துள்ளார்.

ஒரு புதிய திருப்பமாக நேற்று மும்பையில் உள்ள கங்கனா வீட்டுக்கு நேரில் சென்று அவரை சந்தித்து பேசினார்..
அது மட்டுமில்லாமல், கங்கனாவை அரசியலில் சேருமாறும் அழைத்துள்ளார், அமைச்சர் அதால்வே.

‘’ நீங்கள் விரும்பினால் பா.ஜ,க.வில் சேரலாம் அல்லது எனது குடியரசு கட்சியில் இணையலாம்’’ என வலியுறுத்தியுள்ளார்.

ஆனால் அந்த அழைப்பை கங்கனா நிராகரித்து விட்டதாக பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அதால்வே தெரிவித்தார்.

சர்ச்சையில் சிக்கிய நடிகையை , மத்திய அமைச்சர் நேரில் சந்தித்து அரசியலில் சேர அழைப்பு விடுத்தது மும்பையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

-பா.பாரதி.