இந்தி மொழியில் தான் மத்திய அரசு விழாக்கள் நடத்தப்பட வேண்டும் : பா ஜ க அமைச்சர் கருத்து

டில்லி

த்திய சுற்றுச் சூழல் அமைச்சர் ஹர்ஷ் வர்தன் மத்திய அரசு விழாக்களை தேசிய மொழியான இந்தி மொழியில் நடத்த வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளார்.

எல்லைப் பாதுகாப்பு படையினர் நடத்திய ஒரு கருத்தரங்கில் மத்திய சுற்றுச் சூழல் அமைச்சர் ஹர்ஷ் வர்தன் கலந்துக் கொண்டு உரையாற்றினார்.  அந்த உரையில் அவர் கூறியதாவது :

“இந்தியை தேசிய மொழி என நாம் சொல்லிக் கொண்டாலும், அரசின் பெரும்பாலான நிகழ்ச்சிகள் மற்றும் விழாக்கள் ஆங்கிலத்தில் தான் நடைபெறுகிறது.   நடைபெறும் அனைத்து விழாக்களில் சுமார் 95% ஆங்கிலத்தில் நடை பெருகிறது.  அத தவிர்த்து இனி விழாக்களை இந்தி மொழியில் நடத்த வேண்டும்.

ஆங்கிலத்தில் நடத்துவது பாவக் காரியம் என நான் கூறவில்லை.  ஆனால் நமது தேசிய மொழியில் நடத்துவது புண்ணியம் என சொல்கிறேன்.  இந்தி மொழி முழுவதும் தெரியாதவர்கள் கலந்துக் கொள்ளும் விழாக்கள் மட்டும் ஆங்கிலத்தில் நடத்தலாம்.  இந்த விழா இந்தியில் நடப்பது எனக்கு மிகவும் மகிழ்வை அளிக்கிறது.

எல்லைக் காவல் படையினர் நாட்டைக் காப்பதுடன் நில்லாமல் வனத்தையும் வன விலங்குகளையும் காப்பாற்றுவது மிகவும் அவசியம்.  பல விஞ்ஞானத்துறைகளில் உள்ளது போல் விரைவில் ராணுவத்திலும் அதிக அளவில் பெண்கள் பணி புரிவார்கள் என நம்புகிறேன்” என கூறி உள்ளார்.

அமைச்சரின் இந்த கருத்து இந்தி பேசாத மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

You may have missed