மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானிக்கு கொரோனா பாதிப்பு

டில்லி

த்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.

உலக அளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா இரண்டாம் இடம் வகிக்கிறது.

பல திரையுலக மற்றும் அரசியல் பிரபலங்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

இன்று மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதை தனது டிவிட்டரில் ஸ்மிரிதி பதிந்துள்ளார்.

தன்னுடன் தொடர்பில் இருந்தவர்களை பரிசோதனை செய்துக் கொள்ளுமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.