சன்சால்

த்திய பாஜக அமைச்சர் பாபுல் சுப்ரியோ தனது தொகுதி மக்களை உயிருடன் தோலை உரிப்பேன் என மிரட்டியது பரபரப்பை உண்டாக்கி உள்ளது.

மேற்கு வங்க அசன்சால் தொகுதியின்  பாராளுமன்ற உறுப்பினர் பாபுல் சுப்ரியோ.  இவர் மத்திய பாஜக அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளார்.    சமீபத்தில் ராமநவமியை ஒட்டி நடந்த ஊர்வலத்தினால் மேற்கு வங்கத்தில் பல இடங்களில் கலவரங்கள் ஏற்பட்டுள்ளன.   அவ்வாறு கலவரத்தால் பாதிக்கப்பட்டதில் அசன்சாலும் ஒன்றாகும்.   கலவரத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட நேற்று மத்திய அமைச்சர் பாபுல் சுப்ரியோ தொகுதிக்கு வந்தார்.

அசன்சால் பகுதியில் உள்ள கல்யாண்பூரில் அமைந்துள்ள நிவாரண முகாமுக்கு அவர் செல்லும் போது காவல் துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டார்.  தடையை மீறி செல்ல முயன்ற அவர் மீது தடையை மீறியதாகவும்,  அரசு ஊழியரை பணி புரிய விடாமல் தடுத்ததாகவும் மேலும் அரசு ஊழியர் மீது வன்முறையை நடத்தியாகவும் வழக்கு பதிந்துள்ளனர்.    தன்னை தடுத்த மூத்த ஐபிஎஸ் அதிகாரி ரூபேஷ் குமாரை அவர் தாக்கியதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

அப்போது அவரது தொகுதி வாக்காளர்கள்  அவரை சூழ்ந்துக் கொண்டு கலவரத்துக்கு எதிராக போராட வேண்டும் என தெரிவித்துள்ளனர்.  அமைச்சர் அவர்களிடம், “நான் உங்களை சண்டையிட சொன்னேனா?  நான் இங்கிருந்து போய் விட்டால் நீங்கள்தான் நெருப்பில் சிக்கிக் கொள்வீர்கள்”  என ஆத்திரத்துடன் கூறி உள்ளார்.  இதனால் கோபமடைந்த மக்கள் திரும்பிப் போ என தொடர்ந்து கூச்சல் இட்டுள்ளனர்.  அமைச்சர் அவர்களிடம் பதிலுக்கு, “கூச்சலிட்டால் நான் உங்கள் தோலை உரிப்பேன்” என மிரட்டி உள்ளார்.   இந்த உரையாடல் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி உள்ளது.

அமைச்சர் பத்திரிகையாளர்களிடம், “உள்ளூர் பாராளுமன்ற உறுப்பினர்  என்னும் முறையில் மக்களை சந்தித்து குறை கேட்க வேண்டியது எனது கடமை.   நான் மத்திய அமைச்சர்.   நாட்டில் எங்கும் செல்ல எனக்கு உரிமை உண்டு.  நான் சட்டத்தை மீறவில்லை.   என்னை கடமை செய்ய விடாமல் தடுத்து மேற்கு வங்க காவல்துரையினர் தடுத்துள்ளனர்

காவல் அதிகார் ரூபேஷ் குமர் மீது நான் புகார் அளிக்க உள்ளேன்.  அவர் என்னை பல முறை தனது தலைக்கவசத்தால் தாக்கி உள்ள்ளார்.  நான் என்னை தொடக்கூடாது என பல முறை கூறியும் அவர் இவ்வாறு நடந்துக் கொண்டுள்ளார்.”  எனக் கூறி உள்ளார்.