பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்க முடியாது: அருண்ஜெட்லி

டில்லி:

பெட்ரோல் மற்றும் டீசல் மீதான உற்பத்தி வரியை குறைக்க முடியாது, அதற்கான வாய்ப்பே இல்லை என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலைகள் வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது. இது நடுத்தர மக்களிடையே பெரும் அதிருப்தியை உருவாக்கி உள்ளது. இதன் காரணமாக பெட்ரோல், டீசல் மீதான வரிகளை குறைக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகள் குரல் கொடுத்து வருகின்றன.

இதற்கு பதில் அளிக்கும் வகையில், பெட்ரோல், டீசல் மீதான வரிகளை குறைக்க முடியாது என்று மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி தெரிவித்து உள்ளார்.

கடந்த காங்கிரஸ் தலைமையிலான  ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது  முதன்முதலாக,  சர்வதேச சந்தை விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயம் செய்து கொள்ளும் உரிமையை எண்ணெய் நிறுவங்களுக்கு வழங்கப்பட்டது. வழங்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து ஆட்சியை பிடித்த மோடி தலைமையிலான பாஜக அரசு, ஒருபடி மேலே போய்,  பெட்ரோல், டீசல் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யும் உரிமையை  எண்ணெய் நிறுவங்களுக்குகு வழங்கியது.

இதன் காரணமாக பெட்ரோல் , டீசல் விலைகள் தினசரி மாற்றத்துடன் அதிரடியாக ஏலை ஏறிக்கொண்டே வருகிறது. மத்திய அரசின் கண்ணசைவுக்கு ஏற்ப எண்ணை நிறுவனங்கள் விலைகளை மாற்றி வருகின்றன.

கடந்த மாதம் நடைபெற்ற கர்நாடக தேர்தலின்போது, சுமார் 20 நாட்களாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றத்தை மேற்கொள்ளாத எண்ணை நிறுவனங்கள், அதன்பின்னர் அதிரடியாக வரலாறு காணாத அளவில் விலைகளை உயர்த்தியது.

இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள், அரசியல் கட்சியினர்  பெட்ரோல் டீசல் விலையை மத்திய அரசு குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என குரல் எழுப்பினர்.

பெட்ரோல், டீசல் மீதான  உற்பத்திய வரியை மத்திய அரசு குறைத்தால் பெட்ரோல், டீசல் விலை குறை வாய்ப்புள்ளதாக முன்னாள் நிதி அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் உள்பட பலர் கருத்து கருத்துத் தெரிவித்தனர்.

இதற்கு பதில் அளிக்கும் விதமாக, மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி, தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளதில்,

பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை குறைக்க வாய்ப்பே இல்லை என்றும், நாட்டின் குடிமக்கள் அனை வரும் நேர்மையாக தங்களது வரிகளை சரியாக செலுத்தினால் பெட்ரோலிய பொருட்களின் மீதான அதிக வரி விதிப்பை சார்ந்திருக்க வேண்டியது  இருக்காது. சம்பளதாரர்கள் தங்களது  வரிகளை முறையாக செலுத்தி வரும் நிலையில் மற்றவர்களும் தங்களுடைய வரியை செலுத்துவதில் முன்னேற்றம் காணவேண்டும்.

பொது மக்கள்  அனைத்து வகையினங்களுக்கும் வரியை செலுத்தாத நிலையில் பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை குறைக்கும் வாய்ப்பே இல்லை. மாறாக இவற்றின் விலையை குறைத்தால் அது நாட்டின் பொருளாதாரத்தில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும். இந்தியாவின் “கட்டுப்பாடற்ற கடனை” நோக்கி தள்ளும் என்று;k மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி கூறியுள்ளார்.

எரிபொருள் மீதான வரிகள் மூலம் பெறப்பட்ட வருவாயைக் கருத்தில் கொண்டு நாட்டின் வரிவிதிப்பைக் குறைப்பதன் மூலம் வரி அதிகரிப்பு அதிகரிக்கக்கூடும்.

இவ்வாறு பதிவிட்டுள்ளார்.