மக்கள் தேவை என்ன என தெரியாத மத்திய அமைச்சர்

ஹிசார்

த்திய எஃகு அமைச்சர் பீரேந்தர் சிங் மக்களின் தேவைகள் குறித்து தமக்கு எதுவும் தெரியாது என கூட்டத்தில் பேசி உள்ளார்.

மத்திய அமைச்சர் பீரேந்தர் சிங் பாஜகவின் மூத்த அரசியல்வாதி ஆவார். இவர் முதலில் காங்கிரஸ் கட்சியில் இருந்தார். இவர் தாத்தா, தந்தை ஆகியோரும் புகழ்பெற்ற அரசியல் வாதிகள் ஆவார்கள். கடந்த 2014 ஆம் வருடம் மாநிலங்களவை உறுப்பினராக இருந்த அவர் பதவியை ராஜினாமா செய்து விட்டு பாஜகவில் இணைந்தார்.

பாஜக ஆட்சியில் முதலில் பஞ்சாயத் ராஜ், குடிநீர், கிராம முன்னேற்றம் உள்ளிட்ட துறைகளில் அமைச்சராக இருந்தார். தற்போது எஃகுத் துறையில் அமைச்சராக பணி புரிந்து வருகிறார். தற்போதைய மக்களவை தேர்தலில் ஹிசார் தொகுதியில் இவருடைய மகன் போட்டி இடுகிறார்.

ஹிசாரில் நடந்த ஒரு தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அமைச்சர், “நான் ஒரு மத்திய அமைச்சர். என்னிடம் குடிநீர், மருத்துவமனை, மின்சாரம் போன்றவை குறித்து கேட்க வேண்டாம். எனக்கு அதைப் பற்றி எல்லாம் எதுவும் தெரியாது” என கூறி உள்ளார்.

பல துறைகளில் அமைச்சராக இருந்த அவர் இவ்வாறு தமக்கு மக்கள் தேவை குறித்து எதுவும் தெரியாது என பேசியது மக்களை கடும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

கார்ட்டூன் கேலரி