மேகதாது அணை திட்டத்தை மத்திய அரசு எதிர்க்குமாம்! தமிழிசை சொல்கிறார்

சென்னை:

ர்நாடக அரசின்  மேகதாது அணை திட்டத்தை மத்திய அரசு எதிர்க்கும் என்றவர், தமிழக பாஜகவும் எதிர்ப்பு தெரிவித்து வருவதாக  தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறி உள்ளார்.

மத்திய நீர்வளத்துறைதான் மேகதாதுவில் அணை கட்ட திட்ட அறிக்கை வழங்கும்படி  கர்நாடக அரசுக்கு அனுமதி வழங்கி உள்ள நிலையில், மேகதாது அணை கட்ட மத்திய அரசு எதிர்க்கும் என்று தமிழிசை கூறியிருப்பது விந்தையாக உள்ளது.

அனுமதி கொடுத்தவர்களே அவர்கள்தான்… அப்படி இருக்கும்போது… அவர்களே எதிர்ப்பார்கள் என்று கூறுவது மக்களை முட்டாளாக்கும் செயல் என்று தமிழிசையை சமூக வலைதளங்களில் வசைபாடி வருகின்றனர்.

இன்று செய்தியளார்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர்.தமிழிசை சவுந்திரராஜன், பிரதமர் மோடியை விமர்சனம் செய்யும் நிலை, தமிழக அரசியல் கட்சியினரிடையே நிலவுகிறது என்று குறைபட்டுக்கொண்டவர், மோடி அரசு பல்வேறு நலத்திட்டங்களை நிறைவேற்றி இருப்பதாக தெரிவித்தார்.

2019 ம் ஆண்டுக்கான தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி இருப்பதாக கூறிய தமிழிசை,  ஜனவரி மாதத்தில் அனைத்து வாக்குச்சாவடி முகவர்களோடும் பிரதமர் மோடி உரையாட  இருப்பதாகவும் தெரிவித்தார்.

நாடு முழுவதும் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் கடன் தள்ளுபடி என்று கூறாமல், பாஜக அரசு நன்மை செய்து வருவதாக தெரிவித்தார்,  மேகதாது அணை விவகாரத்தில் பாஜக தெளிவாக உள்ளது என்று கூறினார்.

மேலும் மேகதாது அணை விவகாரத்தில், அரசியல் செய்ய வேண்டாம் என திருநாவுக்கரசர், ஸ்டாலினை அழைத்து குமாரசாமி கூறட்டும் என்று தெரிவித்தவர், மேகதாது அணை திட்டத்தை  தமிழக பாஜகவும், மத்திய அரசும்  எதிர்க்கும் என்று கூறினார்.

அதைத்தொடர்ந்து செய்தியாளர்கள், கருணாநிதி சிலை திறப்பு விழாவில் ரஜினி கலந்து கொள்கிறாரே என்ற கேள்விக்கு,   யாரை வேண்டுமானாலும் சிலை திறப்பு விழாவுக்கு மு.க.ஸ்டாலின் அழைக்கலாம் என தெரிவித்தார்.

கருணாநிதி சிலை திறப்பு விழாவில் ரஜினி பங்கேற்பதால் கூட்டணி மாறிவிடாது என்றவர், கருணாநிதி சிலை திறப்பு விழாவை திமுக கூட்டணி கட்சிகளின் விழா என்று தான் பார்க்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கார்ட்டூன் கேலரி