ஐக்கிய அரபு அமீரகத்தில் கட்டாய ராணுவப் பணி 16 மாதங்களாக அதிகரிப்பு

துபாய்:

ஏமனில் நடந்த போரின் போது ஐக்கிய அரபு அமீரக ராணுவத்திற்கு ஆள் பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால், உயர் கல்வி முடித்த ஆண்கள் கட்டாயமாக 12 மாதங்கள் ராணுவ பணியாற்ற வேண்டும் என 2014-ம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் சட்டம் கொண்டு வரப்பட்டது.

இதர ஆண்கள் 2 ஆண்டுகள் பணியாற்றவும் உத்தரவிடப்பட்டது. பெண்கள் விரும்பினால், குடும்பத்தினரின் அனுமதி பெற்று ராணுவ பணியாற்ற அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில், கட்டாய ராணுவ பணி 16 மாதங்களாக உயர்த்தி ராணுவ தலைமை அதிகாரி அறிவித்துள்ளார். இத்தகவல் அந்நாட்டின் அரசு நாளிதழில் வெளியாகியுள்ளது.