ரூ.700 கோடியை வெள்ள நிவாரண நிதியாக அளித்து உதவிக்கரம் நீட்டிய ஐக்கிய அரபு அமீரகம்

கனமழை மற்றும் வெள்ளத்தால் தத்தளிக்கும் கேரளாவுக்கு ரூ.700 கோடி நிவாரண நிதியை ஐக்கிய அரபு அமீரகம் வழங்கியுள்ளது. இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மக்களின் துயரத்தில் பங்கு கொள்வதாகவும் ஐக்கிய அரபு அமீரகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரலாறு காணாத கனமழை பொழிந்ததால் கேரள மாநிலம் வெள்ளத்தில் தத்தளிக்கிறது. மாநிலத்தில் உள்ள அனைத்து அனைகளும் நிரம்பியுள்ள நிலையில் 80 அணைகளும் திறக்கப்பட்டன. கடந்த 10 நாட்களாக பெய்த தொடர் மழையால் 13 மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கியது. கேரளாவின் மொத்த மக்கள் தொகை 3.48 கோடியில், 40 சதவீதம் பேர் வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Kerala

இதையடுத்து ராணுவம், கடற்படை, விமானப்படை, தேசிய பேரிடர் மீட்புப் படை, கடலோர காவல் படை, துணை ராணுவப் படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 67 ஹெலிகாப்டர்கள், 24 சரக்கு விமானங்கள், 548 மோட்டார் படகு கள் மீட்புப் பணியில் பயன்படுத்தப்படுகின்றன. கேராள மாநிலத்திற்கு நிவாரண நிதியாக ரூ.600 கோடியை வழங்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. பல மாநிலங்களும் நிதியுதவி அளித்து வருகின்றன.

வெள்ளத்தில் சிக்கி பாதிக்கபப்ட்ட 8 லட்சம் பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கிட்டத்தட்ட 26,000 வீடுகள் சேதமடைந்துள்ள நிலையில் 134 பாலங்கள் இடிந்து விழுந்துள்ளன. இதனால் ரூ.21,000 கோடிக்கும் அதிகமாக பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளதாக மாநில அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலத்திற்கு வெள்ள நிவாரண நிதிக்காக பலரும் நிதி உதவி அளித்து வருகின்றனர். இந்நிலையில் ஐக்கிய அமீரகம் சார்பில் ரூ.700 கோடி நிவாரண நிதியாக அளிக்கப்பட்டுள்ளது. இதனை அந்நாட்டு துணை அதிபரான ஷேக் முகமது ரஷித் உறுதிப்படுத்தி உள்ளார். ஐக்கிய அரசு அமீரகத்தில் ஏராளமான கேரள மக்கள் பணி புரிந்து வருகின்றனர்.

மேலும், அவர்களின் மன வேதனையில் தாங்களும் பங்கு பெறுவதாக அவர் கூறியுள்ளார். ” ஐக்கிய அரபு அமீரகத்தின் இந்த உதவிக்கு கேரளாவின் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்~ என பினராயி விஜயன் கூறியுள்ளார்.

இதுகுறித்து ஐக்கிய அரசு அமீரக துணை அதிபர் ஷேக் முகமது பின் ரஷித் ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் ” எங்கள் நாட்டின் வளர்ச்சிக்கு கேரள மக்கள் ஆற்றியுள்ள பங்கு அளப்பரியது. இயற்கை சீற்றத்தால் பெரும் பாதிப்பை சந்தித்துள்ள கேரள மக்களின் துயரத்தில் நாங்களும் பங்கு கொள்கிறோம். அவர்களின் மறுவாழ்வுக்கு தேவையான உதவிகளை ஐக்கிய அரசு அமீரகம் மேற்கொள்ளும் ” என கூறியுள்ளார்.